Ad Widget

புதுக்குடியிருப்பில் திடீரென பறந்த புலிக்கொடி!

இம்முறை மாவீரர்தினத்தில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கிலும், கிழக்கிலுமாக இரண்டு இடங்களில் புலிக்கொடி பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு அருகில் இனம்தெரியாதவர்கள் புலிக்கொடியை பறக்க விட்டிருந்தனர். மத்திய கல்லூரிக்கு முன்பாக இருந்த மின்கம்பத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

சம்பவத்தை அறிந்த புதுக்குடியிருப்பு பொலிசார், சம்பவ இடத்திற்கு சென்று புலிக்கொடியை அகற்றினர். மக்களை குழப்பும் விதத்தில் மர்மநபர்கள் சிலர் இந்த செயலை செய்ததாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

அதேபோல, நேற்று கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை வளாகத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts