Ad Widget

“எழு நீ“ நிகழ்விற்கு விக்கினேஸ்வரனை அழைத்தமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு

“எழு நீ“ நிகழ்விற்கு தமிழ் மக்கள் கூட்டனியின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகான அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரனை அழைத்தமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் குறித்த நிகழ்வினையும் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.


வவுனியா நகரசபைக்கு ஒரு கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியதுடன் பல பேரின் வேலைவாய்ப்புக்களையும் இழக்கச் செய்து பல வர்த்தக நிலையங்களை மூடச் செய்த முன்னாள் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு “எழு நீ“ நிகழ்விற்கு அழைக்க முடியும் என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் தி. செந்தில் ரூபன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வவுனியா நகரசபையின் 8ஆவது சபை அமர்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள பல அரசியல் கட்சி சாராதவர்களின் பெயர்களை பரிந்துரைத்திருந்தபோதிலும், அவர்களில் எவரையும் பிரதம விருந்தினராக பெயர் குறிப்பிடாது எவ்விதமான முன்மொழிவுகளையும் சபையில் பெறாது முன்னாள் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்த அவர், அரசியல் நோக்கத்துடனேயே அவரை அழைத்திருப்பதாகவும், எனவே அரசியல் நோக்கமுள்ள சட்டரீதியற்ற நிகழ்வை தாங்கள் புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நகரசசபை உறுப்பினர்களைவிட தலைவரின் தன்னிச்சையான முடிவால் 13பேர் வெளியிலிருந்து குழுவிற்கு தெரிவுசெய்யபட்டுள்ளதுடன் அவர்களது விபரங்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டு சபையின் அனுமதி பெறவில்லை என்பதோடு. இது தொடர்பான கலந்துரையாடல், கூட்டங்களிற்கு சரியானமுறையில் தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நகரசபைத்தலைவர் குறித்த நிகழ்வு எதிரை்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ளதால் தற்போது பிரதம விருந்தினரை மாற்றுவதென்பது சாத்தியமற்ற விடயம் என தெரிவித்துள்ளார்.

Related Posts