குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு சந்தா்ப்பம் வழங்கப்பட வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புடையவர்கள், திருந்தி வாழ்வதற்கு சந்தா்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சமூக நீதிக்கான இளைஞரணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும் தெரிவித்துள்ளதாவது, “யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்புபட்டவா்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தா்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸாா்...

கொழும்புத்துறையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள் போன்றவற்றை வாளால் கொத்திச் சேதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Ad Widget

உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்சென்ற நபர் சடலமாக மீட்பு

யாழ். 3ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவர்மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கச் சென்றுள்ளார். மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை அசைவற்று கிடந்துள்ளார். அதனையடுத்து வீட்டார்...

அச்சுவேலியில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் -அச்சுவேலி மகிழடி பகுதியில் அயல் வீட்டுக்கு வந்த ஒருவரை வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விருந்திற்கு வந்திருந்த ஒருவரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து...

சாவகச்சேரியில் வங்கி ஏரிஎம்மில் திருட முயன்றவர் சிக்கினார்!

சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையைவ் செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) நேற்று காலை நபர் ஒருவர் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில்...

சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும்: யாழ். கட்டளைத் தளபதி எச்சரிக்கை!!

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக...

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது கொடூரத் தாக்குதல்!

யாழில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை இனந்தெரியாத குழுவொன்று கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் உடுவில் பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 72 வயதான பொன்மலர் என்ற மூதாட்டியே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கியுள்ளதாகவும், கொள்ளையிடும்...

கொள்கைகளின் உண்மை தன்மையை உணர்ந்தே பெரும்பாலானோர் அணியில் இணைகின்றனர்: விக்கினேஸ்வரன்

எமது கொள்கைகளின் உண்மை தன்மையினை உணர்ந்தே பெரும்பாலானோர் என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்ள விரும்பி, இணைந்து வருகின்றனரென முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் விக்கினேஸ்வரன் கூறுகையில், ‘இன்று காலை எனக்கு பல தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இன்று...

கோப்பாய் பொலிஸாரின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் இளைஞன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். சந்தேகநபரை பொலிஸார் சட்டவிரோதமாகத் தடுத்துவைத்திருந்தமை மற்றும் அவரைத் தாக்கியமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், கோப்பாய்...

புளியங்குளத்தில் பச்சிளம் குழந்தை கொலை!!

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற்போயுள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை உறவினர்கள் தேடினார்கள். குழந்தை அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. ​பின்னர் குழந்தை நெடுங்கேணி...

பொட்டம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் – கருணா பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர்...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை விவகாரம் – கிளிநொச்சி பொலிஸில் ஒருவர் சரண்!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத...

அரசியல் நெருக்கடிக்கு இரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் எடுப்பார் – சம்பந்தன்

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது....

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு!

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், அரசாங்க வேலைக்கான ஆட்சேர்ப்பின்போது 3 சதவீதமானவர்கள் மாற்றுத்திறனாளிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தம்மையும் அரச வேலைவாய்ப்புக்களில் இணைத்துக்கொள்ளுமாறு ஆளுநரிடம் வேண்டிக்கொண்டனர். குறிப்பாக கரைச்சி பிரதேசசபை...

வவுனியா போராட்ட களத்தில் சர்வதேச ஊடகவியலாளர்கள்!

வெளிநாட்டு தலையீட்டைக் கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவினர்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் சந்தித்துள்ளனர். இதன்போது, 11 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர கைது செய்யப்பட்டமை, இவ்விடயத்தில் வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் செயல் என உறவுகள் ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும்...

ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றி: ஐ.தே.க.

அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ”தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்...

வவுனியாவில் விபச்சாரத்தால் எய்ட்ஸ் தொற்று! இதுவரையில் 13 பேர் பலி!!

வவுனியாவில் விபச்சாரத்தால் எய்ட்ஸ் தொற்று ஏற்படுவதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். உலகம் முழுவதும் எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவுகூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கையில் இம்முறை...

விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அவசியம் – ஆளுநர்

வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா ஒன்றினை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். மருதனார் மடம் இராமநாதன் கல்லுாரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர்...

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே நிரந்தரத் தீர்வு: சுமந்திரன்!

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை அடைய முடியும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு...

தமிழர்களுக்குத் தீர்வில்லாமற் போனமைக்கு கூட்டமைப்பே காரணம்: பந்துல

தமிழர்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் போனமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகச் செயற்படுவதே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக...
Loading posts...

All posts loaded

No more posts