- Tuesday
- May 12th, 2026
வேப்பங்குளம் சிறுவர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகே இரவு 8.20 மணி தொடக்கம் 9.30 மணி வரை சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இவர்களின் நடவடிக்கையின் அச்சத்தில் அவ்விடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை வர்த்தகர்கள் மூடிவிட்டு சென்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக 8.30 மணிக்கு தமிழ் மொழி மூல...
இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பத்தலைவர் ஒருவர் மண்ணுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார். மன்னார் சிலாபத்துறைப் பகுதியில் திங்கட்கிழமை(3) இரவு இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றது. மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் திங்கட்கிழமை (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மன்னார்...
“என்னை அதிகம் நெருக்கடிக்குள்ளாக்கினால், எனக்கு வேறு வழியில்லை. நாட்டு மக்களிற்கு உரையாற்றிவிட்டு பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு சென்றுவிடுவேன்“இப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார். அவரது ருவிற்றர் பக்கத்தில் நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டார். ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிற்குமிடையில் நேற்று முன்தினம்...
பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் எதிர்வரும் 07 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 31 பேருக்கும், கணக்காய்வு உத்தியோகத்தர்கள் 02 பேருக்கும், பதவி உயர்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்கள்...
நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநாச்சி பொது சந்தைவரை முன்னெடுக்கப்பட்டு அங்கு கவனயீர்ப்பு...
அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(திங்கட்கிழமை) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...
முல்லை மாவட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான இளையோர் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் பல பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவரொட்டிகளில் நீண்டகால யுத்தம் நிறைவிற்கு வந்து இப்போது நாம் ஓரளவு நின்மதியான காற்றினை சுவாசிக்கின்றோம் இதனைக் குழப்பும் விதமான செயற்பாடுகளும் இடைக்கிடை நடைபெறுகின்றன. அனைத்துவிதமான கொலைகளையும் சுமூகமாக நாம் எதிர்ப்போம்...
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அரசியல், சினிமா, தனி வாழ்க்கை, முக்கிய பிரச்சினைகள்...
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பின் பக்க மதிலால் ஏறி குதித்து வந்த நால்வரே தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தனது கைத்தொலைபேசியையும் அபகரித்து சென்றதாக பொலிஸாரிடம் தாக்குதலுக்கு இலக்கானவர்...
வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சித்திரவதைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட கும்பல் முச்சக்கர வண்டியில் மாணவியைக் கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். “இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முல்லைத்தீவில் வைத்துக்...
வடக்கில் போரின் பின்னரான காலப் பகுதியில் உடல் அங்கக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்து உள்ளதாக ஜெய்ப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “போரின் பின்னரான கால பகுதியில் ஜெய்ப்பூர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயன்பெற்று உள்ளனர். அவர்களுக்கு எமது நிறுவனத்தின் ஊடாக செயற்கை அவயங்கள் பொருத்தி உள்ளோம். போரின்...
வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் “நிவாரணம்” அமைப்பு கிளிநொச்சி- பளை பிரதேசத்தில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்றையும் அமைக்கவுள்ளது. இது குறித்து “நிவாரணம்” அமைப்பின் நிறுவுனர் எஸ்.செந்தில் குமரன் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது....
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திர குமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை சட்ட மா அதிபர் திணைக்களம் மீளப் பெற்றுக்கொண்டது. அதனால் சுமார் 14 மாதங்களின் பின்னர் அந்த வழக்கில் இருந்தும் பூபாலசிங்கம் இந்திர குமார் விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் சுமார் 3 ஆண்டுகள் 6 மாதங்கள்...
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, கன்னன்துட பகுதியில் வைத்தே 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த...
நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து மதிப்பான முறையில் பதவிகளை உடன் துறந்து வெளியேறுமாறு மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது சகாக்களுக்கும் அவசர ஆலோசனை வழங்கியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. காலியில் நேற்றுமாலை நடைபெற்ற ‘நீதிக்கான மக்கள் குரல்’ பேரணியில் கலந்துகொண்ட அவர், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்டப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும்...
நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற...
பிரதமர் மற்றும் அமைச்சரவை இயங்குவதற்கு .இடைக்காலத் தடை உத்தரவு வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது. பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் எந்த அதிகாரத்தைக் கொண்டு பதவியில் நீடிக்க முடியும் என்று நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு அறிவித்தல் அனுப்ப மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கியது. அத்துடன், இந்த மனு மீதான விவாதம் வரும் 12ஆம் 13ஆம்...
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார்.ஐக்கிய தேசிய கட்சி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள நாட்டையே காட்டிக் கொடுக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். தமிழ் தேசியகூட்டமைப்பினரும்,பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனும் எதிர்பார்த்த விடுதலை புலிகளின் அமைப்பு தற்போது வடக்கில்...
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை உபயோகித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தமிழக அரசின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஸ்விட்ஸர்லாந்தினை மையமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இயங்கும் புதிய அமைப்பொன்றினால்...
Loading posts...
All posts loaded
No more posts
