Ad Widget

“உடன் பதவி வில­கி­வி­டுங்­கள்” மகிந்­த­வுக்கு ரணில் அறி­வுரை!!

நீதி­மன்­றத் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து மதிப்­பான முறை­யில் பத­வி­களை உடன் துறந்து வெளி­யே­று­மாறு மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும், அவ­ரது சகாக்­க­ளுக்­கும் அவ­சர ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

காலி­யில் நேற்றுமாலை நடை­பெற்ற ‘நீதிக்­கான மக்­கள் குரல்’ பேர­ணி­யில் கலந்­து­கொண்ட அவர், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய தீர்­டப்­புத் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த ஒக்­டோ­பர் மாதம் 26ஆம் திகதி நான் காலிக்கு வந்­தி­ருந்த வேளை­யி­லேயே அவ­ச­ர­மாக தலைமை அமைச்­சர் பத­வி­யில் மாற்­றம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அது சட்­டத்­துக்கு முர­ணான நட­வ­டிக்கை என அன்றே நான் கூறி­யி­ருந்­தேன். எனி­னும், அவர்­கள் அதைக் கண்­டு­கொள்­ள­வில்லை.

இதை­ய­டுத்து நீதி­மன்­றத்தை நாடி­னோம். எமக்கு இடைக்­கால நீதி கிடைத்­துள்­ளது. இன்று நான் காலி­யில் இருக்­கும்­போதே அந்த நற்­செய்­தி­யும் வெளி­யா­னது.

ஆகவே, நீதி­மன்­றத் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து கௌர­வ­மான முறை­யில் பத­வி­களை விட்­டுச் செல்­லு­மாறு மகிந்த ராஜ­பக்­ச­வி­ட­மும் அவ­ரது சகாக்­க­ளி­ட­மும் கேட்­டுக்­கொள்­கின்­றேன். அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் செயற்­பட முன்­வ­ரு­மாறு அனைத்­துத் தரப்­புக்­கும் அழைப்பு விடுக்­கின்­றேன் – என்­றார்.

Related Posts