- Monday
- April 6th, 2026
யாழில். மார்கழி மாத மழைவீழ்ச்சி குறைவாக காணப்பட்டுவந்தநிலையில், பெரும் போகத்திற்கு விதைக்கப்பட்ட நெற் பயிர்கள் அழிவடையும் நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு பெய்த கடும் மழையை அடுத்து வயல் நிலங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
யாழில் அதிகரித்துவரும் தாய் சேய் குழந்தை மரணம் தொடர்பான விசாரணைகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள படாத நிலையில் யாழ். நீதிமன்றில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.உதயசிறி தெரிவித்தார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் காது,மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் மீது வாள் வெட்டு மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
தொடர்மழையை அடுத்து வடக்கில் தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்களின் தொற்று தீவிரமடையலாம் என்பதால் உணவு, குடிதண்ணீர் என்பவற்றின் சுகாதாரத்தைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: (more…)
பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை (more…)
செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதென்பது பலமுக்கிய அரசாங்கங்களுக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் சாதனையைச் செய்திருப்பது உலகெங்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)
பட்டதாரிப் பயிலுநர்கள் 514பேர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(26.12.2012) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். (more…)
போப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இருந்த பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான காணி இராணுவத்திற்கென பனை அபிவிருத்திச் சபையால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இந்தக்காணியை படையினர் எடுத்துக் கொள்ளலாம் என்று எழுத்து மூலமாக பனை அபிவிருத்திச் சபை தனது (more…)
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (more…)
யாழ். நகரில் இருந்து இரவு 9 மணிக்கு கடைசி பஸ்சேவை இடம் பெறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தலைவர் எஸ். சத்தியேந்திரா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். (more…)
பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தங்களது பிரதேச அபிவிருத்துக்காக பாடுபட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.பட்டதாரி பயிலுனர்கள் 514 பேரை பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைந்துக் கொள்ளப்படுவதற்கான (more…)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
வடக்கு, கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் மாற்று வலுவுள்ளோருக்கு அடுத்த ஆண்டு விசேட தொழிற்பயிற்சி வழங்கி அவர்கள் வருமானத்தை ஈட்டும் வகையில் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்காக இலங்கை அரசும், உலக வங்கியும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன. (more…)
பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள், (more…)
கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான (more…)
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வர்ணப்பூச்சு வேலைகளிற்காக வெளிநாட்டுப் பொது நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூபா 10 இலட்சம் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்று யாழ்.மாநகர சபைத் தலைவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். (more…)
2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான 4 ஆண்டுப் பகுதியில் யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் வீதம் கடந்த காலங்களைவிட குறைவாகவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி தெரிவித்தார். (more…)
கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிகழ்ந்து வரும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மாநகர சபையினால் நிதி உதவி வழங்குவதற்கான பிரேரணையை திங்கட்கிழமை சபையில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா முன்வைத்தார். (more…)
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் திங்கட்கிழமை இரவு இந்த கைகலப்பு இடம்பெற்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
