Ad Widget

யாழ். மாநகர முதல்வரின் தலையில் துப்பாகி வைத்து மிரட்டியமை தொடர்பாக வழக்கு விசாரணை

யாழ். மாநாகர முதல்வரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பளர் அங்கஜனுக்கு எதிரான வழங்கு திங்கட்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 2010 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணியின் போது யாழ். மாநாகர முதல்வரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியமை, அங்கஜனின் இரண்டு வாகனங்கள் தேசப்படுத்தி ஒரு வாகனத்திற்கு தீ மூட்டியதாக ஈ.பி.டி.பி யினருக்கு எதிராகவும் யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான இ.த.விக்னராஜா, ஜெனி மதுரநாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சி.ஆர்.டி. சில்வா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

யாழ். மாநாகர முதல்வரின் நலனைக் கவனிப்பதற்காக சட்டத்தரணி ரங்கனின் அனுசரணையுடன் மு. றெமிடியஸ் ஆஜராகியிருந்தார்.

மன்றில் முறைப்பாட்டார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சி.ஆர்.டி. சில்வா வாதாடுகையில், இவ்வழக்கில் முதல்வரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக அங்கஜனுக்கு எதிராகவும், அங்கஜனின் இரண்டு வாகனங்கள் சேதப்படுத்தி ஒரு வாகனத்திற்கு தீ மூட்டியதாக ஈபிடிபியினருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கு முதல்வருக்கு எதிராக குற்றம் பாரதூரமானதாகவும், அங்கஜனுக்கு எதிரான குற்றம் சிறு குற்றம் எனவும் பொலிஸார் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இங்கு பொலிஸார் இது தொடர்பான பூரண விசாரணையை ஜனாதிபதி சட்டத்தரணி சி.ஆர்.டி சில்வின் சமர்ப்பணங்களையும் தகவல் புத்தகத்தில் பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி ஆலோசனை பெற்று, வழக்குத் தாக்கல் செய்யுமாறு யாழ். நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

Related Posts