- Saturday
- May 3rd, 2025

யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர் வீடுகளிற்கும், வர்த்தக நிலையங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இதன்படி நேற்றையதினம், யாழ். கஸ்தூரியார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி மூலம் நிதி சேமிப்பில் ஈடுபட்டு வந்த பிக்குகள் பார்ப்பதற்கு சந்தேகத்துக்கிடமான விதத்தில் காணப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும்,விகாரைகளில் தங்கியுள்ள ஏழைச் சிறுவர்களின் நலனுக்காக இவ்வாறு நிதி சேமிப்பில்...

யாழ்ப்பாணத்தில் நகரை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமது ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை மக்கள் சொல்லக் கூடிய வகையில் முறைப்பாட்டுப் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. (more…)

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் நெல்லியடி நகரப் பகுதியில் "தமிழீழ எல்லாளன் படை" தமிழீழம் என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் சன நடமாட்டம் குறைவாக இருந்ததால் நகரத்தில் உள்ள பேரூந்து நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. (more…)

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தினுடைய நிலவரம் தொடர்பாகவும், பல்கலைக்கழக நடவடிக்கைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி தொடர்பாகவும் மாணவப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகின்றது. (more…)

யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு சிங்கர் நிறுவனத்தினால் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உள ஆற்றுப்படுத்தலுக்காகவும் பொழுது போக்கிற்காகவும் இந்த எல் சீடி ரக தொலைக்காட்சிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனங்கள் நோயாளர்களின் நலன்களுக்காக பாரிய...

வங்கி முகாமையாளர் ஒருவர் உடுவில் பகுதியில் புனரமைக்கபட்டுக் கொண்டிருக்கும் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளரான தர்மலிங்கம் கனகலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.வங்கி வேலைகள் நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் உடுவில் ஆலடிப்பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உதயன் நாளிதழில் கடந்த மாதம் 28ஆம் திகதி வெளியான செய்தி ஒன்று தொடர்பில் "உதயன்" ஆசிரியர் ரி.பிரேமானந்துக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும், பிறேமானந்தைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. (more…)

யாழ். தென்மராட்சியின் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கும் இவரது சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போதே இராணுவத்தினர் குறுக்கிட்டுள்ளனர். இதன்போது மது போதையிலிருந்த இவர் இராணுவச் சிப்பாய் ஒருவரை பலமாக தாக்கியுள்ளார்.இதன்போது ஒன்றுகூடிய இராணுவத்தினர் குறித்த நபரை சராமரியாகத் தாக்கியுள்ளனர். (more…)

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக, எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழில் சங்கம் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு யாழ். மாவட்டத்தில் மட்டும்...

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதனும் விவசாய பீட பீடாதிபதியாக பேராசிரியர் மிகுந்தனும் புதன்கிழமை(6) பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து தான் பொலிஸ் மா அதிபருக்கும், யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக யாழ். நீதவான் மா.கணேசராஜா தெரிவித்தார் என இணையத்தளம்...

யாழ் மருத்துவர்கள் சங்கம் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.மேற்படி பகிஷ்கரிப்பை நிறுத்துமாறு பொலிஸார் தாக்கல் செய்த மனுவையடுத்து நீதவான் கணேசராசா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.நோயாளர்கள் மற்றும் விபத்தில் காயமடைபவர்கள் பாதிக்கப்படலாம் என்பதாலும் இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் என தான் எனக் கருதுவதாலும் இந்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறு யாழ் பொலிஸ்...

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் இன்று புதன் கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு ண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்விசார் ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர்.அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களது இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக யாழ்.பல்கலைக் கழக ஊழியர்களும் தொடர்ச்சியான இப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இங்கு கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன்...

இன்று காலை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அலுவலகத்தைப் பூட்டி அதன் திறப்பை தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளார் வேம்படியில் பதில் அதிபராக இருந்த முத்துக்குமாரு ரஜனி . இதனால் இன்று தனது மகளை வேம்படியில் சேர்க்க வந்த யாழ் அரச அதிபர் வாகனத்துடன் நின்று காத்திருந்து விட்டு வெளியேறினார்.இவ்வாறான செயற்பாடுகள் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான...

யாழ் போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயிலிருந்து இறந்த நிலையில் சிசு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் சிசுக்கலைப்புக்காக வந்த குறித்த பெண் ஒருவர் மலசலகூடத்திற்குள் குழந்தையைப் பெற்று விட்டு தலைமறைவாகியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயில் அடைப்பு...

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் HNDA, HNDM, பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகள் இன்று கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் இவர்களின் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது. (more…)

நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு விதித்த நீதிமன்றத் தீர்ப்பில் திருத்தம் செய்யவேண்டும் என்று கூட்டமைப்பு மற்றும் விடுதலை முன்னணி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி கணேசராஜா, தடையுத்தரவு சரியானதே என்று புதன்கிழமை தீர்ப்பளித்திருந்தார்...

பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கு கடந்த 5,6,7 ம்திகதிகளில் தோற்றிய பட்டதாரிகளில் 2011 டிசம்பா் மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகமாயின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் என சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் அனைவருக்கும் பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் திங்கட்கிழமை(2-7-2012) காலை 9 மணிக்கு யாழ்...

All posts loaded
No more posts