Ad Widget

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கடிதம்!

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக, எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழில் சங்கம் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு யாழ். மாவட்டத்தில் மட்டும் நியமனம் வழங்கப்படாமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனங்கள் வழங்கப்படுமிடத்து HNDA பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனம் வழங்க முடியாது என உயர் அதிகாரிகளால் கூறப்படுவது ஏற்க முடியாது எனவும், HNDA பட்டதாரிகளுக்கு நியமனம் ஏன் வழங்க முடியாது என எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு தொழிற்சங்க செயலாளர் தேசசக்தி எம்.ஹுஸைன் முபாறக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முகாமைத்துவ பீட பட்டதாரிகளும் கடிதம்!

2011 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் முகாமைத்துவ வணிகபீடப் பட்டதாரிகளை உள்வாங்கப்படாமையை கண்டித்து முகாமைத்துவ பீட பட்டதாரிகள் புதன்கிழமை(6) யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டப் படிப்பு முடிக்க வேண்டிய நாம் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலப் பகுதியல் பட்டப்படிப்பினை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பட்டப்படிப்பு முடித்த 50 மாணவர்களும் வேலை வாய்ப்பு இன்றி இருப்பதாகவும், தம்மையும் பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கிக் கொள்ளுமாறும் பட்டதாரி மாணவர்கள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைவாக 2011ஆம் ஆண்டின் காலப்பகுதி பட்டப்படிப்பு முடித்த காரணத்தினால் 4 மாதங்களை கருத்திற் கொள்ளாது தமக்கும் நியமனம் வழங்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மகஜர் தொடர்பாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் 5 வருடங்களிற்கு நியமனம் வழங்க முடியாது என்றும், அவ்வாறு நியமனம் வழங்க வேண்டுமானால் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாக முகாமைத்துவ வணிக பீட அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அமைச்சர் ஊடாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் வருமிடத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாக முகாமைத்துவ வணிக பீட மாணவர்கள் தெரிவித்தன

Related Posts