Ad Widget

யாழ் மருத்துவர்கள் சங்கத்தின் பகிஷ்கரிப்புக்கு நீதிமன்றம் தடை

யாழ் மருத்துவர்கள் சங்கம் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.மேற்படி பகிஷ்கரிப்பை நிறுத்துமாறு பொலிஸார் தாக்கல் செய்த மனுவையடுத்து நீதவான் கணேசராசா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.நோயாளர்கள் மற்றும் விபத்தில் காயமடைபவர்கள் பாதிக்கப்படலாம் என்பதாலும் இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் என தான் எனக் கருதுவதாலும் இந்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறு யாழ் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன் சிகேரா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து மேற்படி உத்தரவை பிறப்பித்த யாழ் நீதவான் ம.கணேசராசா, தேவையேற்படின் பலத்தை பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நோயாளர் உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழில் உண்ணாவிரதம்

இதே வேளை யாழ்.போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் உரிமையை பாதுகாக்குமாறு கோரியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளருக்கும் யாழ்.வைத்தியர் சங்கத்தினருக்குமிடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவேண்டும் எனக் கோரியும் நோயாளர் உரிமைக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் இன்று வியாழக்கிழமை காலை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அலுவலகம் முன்னால் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.நோயாளர் உரிமைக்கான மக்கள் இயக்க உப தலைவர் க.கந்தவேல், திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான உணவு தவிர்ப்பு போராட்டமானது தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடருமென உண்ணா விரதிகள் தெரிவித்தனர்.யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர்களின் உரிமையைப் பாதுக்க வேண்டும், யாழ்.போதனா வைத்தியசாலையின் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு முடிவுகள் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts