மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அதுமூடியே இருக்கட்டும் ஹத்துருசிங்க

பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் இராசகுமாரனுக்கு பயங்கரவாத தடுப்புப்பொலிசார் அழைப்பு!

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் திரு இராசகுமாரனுக்கு பயங்கரவாத தடுப்புப்பொலிசார் நாளை வவுனியா விசாரணை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது. பல்கலைக்கழகத்தில் கடந்த 27 28 ம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின் எதிர்வரும் காலங்களில் மாவீரர் தினத்தினை (more…)
Ad Widget

வடமாகாண வர்ண இரவில் 300 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு

மனம் மாறாத பட்சத்தில் மாணவர் விடுதலைஇல்லை! விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் ; கட்டளை தளபதி ஹத்துருசிங்க

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என மாணவர்கள் காத்திருப்பது வெறும் கனவாகவே இருக்கும் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் (more…)

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில்,வைத்தியசாலையின் செயற்ப்பாடுகள் செயலிழந்து

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஒருவர் நேற்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலே இவ்வாறு பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் (more…)

உண்ணாவிரத போராட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் 9 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் அரசியல் கைதிகளை மற்றும் சரணடைந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும், (more…)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.அதேவேளை, மாத கொடுப்பனவினை அதிகரிப்பதற்கும், சீருடைகள், துவிச்சக்கரவண்டிகள் (more…)

யாழ் இராணுவ தளபதியை துணைவேந்தர் தலைமையிலான பல்கலை சமூகம் சந்திப்பு

யாழ் இராணுவத் தளபதியினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான பல்கலைக்கழக சமுகம் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டு வருகின்றது.இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையகத்தில் இவ் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

கொடிகாமம் சந்தை பகுதியில் மலகூட கழிவு நீர் வீதியில்..! பிரதேசசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சாவகச்சேரி பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாடியிலிருந்து இறங்க விடாமல் தடுத்து கொடிகாமம் நகர்ப் பகுதி வர்த்தகர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: (more…)

யாழ்.குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி

யாழ்.குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் நேற்றுக் காலை 8.30 மணி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. (more…)

ஊழியர் சேமலாப நிதி செலுத்த தவறிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

ஊழியர் சேமலாப நிதி செலுத்ததவறிய 8 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.டிசெம்பர் மாத கலப்பகுதியில் யாழ். மற்றும் கிளிநொச்சி, வவுனியா பகுதியில் வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் மேற்கொண்ட பரிசீலணையின் (more…)

யாழில் உண்ணாவிரத பந்தல் சேதம்,கழிவு ஊற்றி நாசம்,

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. (more…)

தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு விளக்கேற்றி நினைவு கூருவதற்கு தடை ;அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. (more…)

யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்கவின் அழைப்பை நிராகரித்த பீடாதிபதிகள்!

வெள்ளிக்கிழமை பலாலியில் மாநாடொன்றை நடத்த யாழ். மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்க விடுத்த அழைப்பினை பல்கலைக்கழக பீடாதிபதிகள் முற்றாக நிராகரித்து விட்டனர்.அத்துடன், பலாலிக்கு சென்று பேச்சு நடத்த வேண்டிய தேவை தமக்கில்லையென தெரிவித்துள்ள பீடாதிபதிகள் மீண்டும் குடாநாட்டில் இராணுவ ஆட்சியொன்றை முழுமையாக கொண்டுவர (more…)

காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம்

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. (more…)

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த சமயம் கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் இவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். (more…)

மேலும் நான்கு பேர் கைது என முறைப்பாடு , மொத்தம் 43 ஆக உயர்வு

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து இதுவரையில் 43 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் பதிவாகியுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.'ஆறுதல்' நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இணைப்பாளர் சுந்தரம் திவகலால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, (more…)

10 இற்கும் மேற்பட்டோருக்கு வாராந்தம் டெங்கு தொற்று

தற்போது மழை வீழ்ச்சி குறைவடைந்திருந்தாலும் வாராந்தம் 10 இற்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர். எனவே டெங்கு பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)

பல்கலை மாணவர்களை விடுதலை செய்யுங்கள்; மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென (more…)
Loading posts...

All posts loaded

No more posts