Ad Widget

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தமது பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது சம்பள உயர்வுப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டனர்.

கல்வி சாரா ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு 45 நாட்களுக்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எழுத்து மூலமான உறுதிமொழியை அளித்துள்ளது. இந்நிலையில் கல்விசாரா ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டு வந்ததாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்தின் தலைவர் ஆர். சந்திரபால தெரிவித்தார்.

Related Posts