- Sunday
- May 4th, 2025
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை நிர்வாக சேவை வகுப்பு 3 இற்கான வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டவர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.அதனை இங்கே காணலாம் இவர்களுக்கான அழைப்புக்கடிதம் விரைவில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை பொதுநிர்வாக அமைச்சின் ஆட்சேர்ப்பு திணைக்கள இயக்குனர் திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹ வுடன் 011-2681237 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெறமுடியும் .

2011ஆம் ஆண்டின் உயர்தர பெறுபேற்றின் இஸட் புள்ளியை ரத்து செய்யுமாறு உயர்தர மாணவர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி;.கனகராஜ் தெரிவித்துள்ளார்.கடந்த வருட உயர்தர பெறுபேற்றில் குளறுபடிகள் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் உயர்தர பெறுபேற்றிலும், இஸட் புள்ளிகளின் நம்பகத்தன்மையினாலும் குழப்பமடைந்துள்ளனர்....

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற அரச சொத்து ஊழல் தொடர்பான விசாரணையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் வடமாகாண வைத்தியசாலைகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பின் பின்னர் சுகாதார அமைச்சினால் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கப்படாவிட்டால் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடாத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தாய் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பா.சாய்நிரஞ்சன்...

இலங்கை சட்டக்கல்லூரி 2013ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் பரீட்சை விண்ணப்பத்தாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது.நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது இந்த முத்திரை வெளியிட்டப்பட்டது. வட மாகாண சபையும் அஞ்சல் திணைக்களமும் இணைந்தே இந்த முத்திரையினை வெளியிட்டனர். (more…)

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் ஏ சித்திகள் பெற்றும் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் கல்வியில் உள்ள நியாயம் இதுதானா? என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.இஸட் புள்ளி வெளியிடப்பட்டதன் பின் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை ஏற்றுக்...

உதயன் பத்திரிகை ஆசிரியரால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான வழக்கு விசாரணைகளிலிருந்து தான் விலகிக்கொள்வதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா உயர்நீதிமன்றுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த 17 ஆம் திகதியிட்டு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் மோசடி மற்றும் நிர்வாக முரண்பாடு,வைத்தியர்கள் மீதாக அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி வட மாகாண வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து அரச வைத்தியர்களும் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்து நடத்தும் இந்தப் போராட்டத்தில் யாழ்.போதனாவைத்தியசாலை வைத்தியர்களும் ஈடுபட்டுள்ளனர். (more…)

இன்று காலை 10 மணிக்கு ஆயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் கோலகலமாகவும் பக்தி பூர்வமாகவும் நல்லுார்க் கந்தன் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

யாழ் சுன்னாகம் கிழக்குப்பகுதியில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்று அதனை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்.மாவட்டத்தில் இராணுவம் அவசியமற்றது என்று கூறும் அரசியல்வாதிகள் வறிய மக்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் நாங்கள் இரண்டாயிரம் வீடுகள் வரையில் மக்களுக்கு நிர்மாணித்து வழங்கியுள்ளோம். இவ்வாறு யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கேள்வி யெழுப்பினார்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஜே/279 கிராம சேவகர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பமொன்றுக்கு இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு...

கடந்த சில நாட்களாக யாழ். சங்கானைப் பகுதியில் பிக்குகளின் உடையணிந்த இருவரும் சிவில் உடையணிந்த ஒருவரும் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்து வருகின்றனர்.இவர்கள் திருகோணமலையில் வசிக்கின்ற அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாகக் கூறி திருகோணமலை அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்களின் இலட்சினைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்களையும் காண்பிக்கின்றனர்.இவர்கள் மூவரும் தமக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் நன்கொடை...

போருக்கு பின்னர் முதன் முதலாக யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.இன்று நாளையும் நடைபெறும் இம்மாட்டில் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர்.இச்சர்வதேச ஆய்வு மாநாட்டிற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் யாழ்.ரில்கே விடுதியில் நடைபெற்றது. (more…)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்ற மு.காவின் முடிவை நான் வரவேற்கிறேன். அது ஒரு நல்ல முடிவு. அரசால் ஏமாற்றப்படுவதற்கு முன்னர் ஹக்கீம் ஏமாறாமல் வெளியேறியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். இவ்வாறு நேற்று கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். (more…)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை நெல்லியடி பஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் புலிக்கொடியை ஏந்தியவாறு பஸ் நிலையத்தை வட்டமிட்டுச் சென்றுள்ளனர். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பில் தாக்கல் செய்தது.இந்த வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதி செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கே.கருணாகரம் ஆகியோர் தாக்கல் செய்தனர். (more…)

பிரசவ வலி ஏற்ப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த பெண்ணும் கருவில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ் நயீனாதீவில் இடம்பெற்றுள்ளது. (more…)

‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது....

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான நிமலரூபனின் கொலை மற்றும் வடக்கில் நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கண்டித்து நெல்லியடியில் இன்று நடக்கும் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிவான் மன்று மறுத்து விட்டது. அதேநேரம் போராட்டத்துக்குப் போதிய பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவுறுத்தியது. (more…)

All posts loaded
No more posts