- Sunday
- May 4th, 2025

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாடசாலைகளுக்கு அருகில் மதுபானமும் போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இப்பரீட்சைக்காக 2 இலட்சத்து 70 ஆயிரம் பரீட்சார்திகள் தோற்றவுள்ளதுடன் 12 ஆயிரம் பரீட்சை உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். (more…)

மாகாண மட்ட புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாணவனை மோதி தள்ளிவிட்டுத் தலைமறைவாகியது மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தான். இந்தச் சம்பவம் நேற்று மாங்குளத்தில் இடம்பெற்றது. (more…)

வடமாகாண பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில்44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது .கணிதம்,ஆங்கிலம் போன்ற பாடங்களில் அதிகமாக வெற்றிடங்கள் காணப்படும் கல்வி வலயங்களுக்கு குறித்த 44ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளர்கள் இந்நிகழ்வில் யாழ் .வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட வடமாகாண ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் .

2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் தேர்தல்கள் செயலகத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.slelections.gov.lk/electoral/

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த சட்டத்தரணி விரைவில் கைது செய்யப்படுவார் என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (more…)

யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையின் திருநெல்வேலி விரிவாக்கல் கிளையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரின்மோசடி காரணமாக தமதுநகைகளின் இருப்புக் குறித்து அறிவதற்கு அவசரமாகச் சென்ற மக்கள் மீது மக்கள் வங்கி அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் இன்று காலை முதல் திருநெல்வேலிச் சந்திப் பகுதியில்...

நாடளாவியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் இன்று முதல் ஆரம்பமாகிறது.இன்றைய தினம் விடுமுறை விடப்படும் இப்பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. (more…)

இலங்கை மக்கள் வங்கியின் யாழ். பல்கலைக்கழக கிளையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவர் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, (more…)

சமையலடுப்பு வெடித்து சிதறியதால் எரியகாயங்களுக்குள்ளான இலக்காகிய பெண் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர். (more…)

வடமாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பெப்ரவரி இறுதியில் அதாவது 26 அந்தத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளது என தெரிகிறது.முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசு திட்டமிருந்தது ஆனபோதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பகுதியில் நடைபெற்றுள்ளதால்,அதற்கு முன்னர் இத் தேர்தலை நடத்துவதற்கு அரசு...

யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் பணிப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தொடர்புபட்டுள்ளது நிரூபணமானதையடுத்து நீதியானதொரு விசாரணையினையினை மேற்கொள்ள வேண்டும் எனவே பணிப்பாளரை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியில் இருந்து இடை நிறுத்த...
தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால்...

யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மீதான விசாரணை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கோரிக்கையை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வட மாகாணம் தழுவிய தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.யாழ். போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பக்கசார்பின்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துமாறு கோரி எதிர்வரும்...

வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர். எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் மேற்படி கண்டனத்...

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் வேலைக்கு சமூகமளிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலை விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். (more…)

இந்த அரசு பொதுமக்களுக்குத் தெரியாமலேயே இலவசக் கல்வியை மாற்றி அமைக்கப் போகிறது. பல்கலைக்கழகக் கல்வி மட்டுமன்றி பாடசாலைக் கல்வியையும் பணம் கொடுத்தே பெற வேண்டிய நிலை இதன் மூலம் ஏற்படப் போகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதை பிரதான மார்க்கமாகக் கொண்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முள்ளியவளையைச் சேர்ந்த பாஸ்கரன் வனஜன் மற்றும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த பொன்னையா சிதம்பரநாதன் ஆகிய இருவருமே விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவார். (more…)

படையினர் கோபத்தில் இருக்கிறார்கள், அவர்களை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடாதீர்கள் என சிவாஜிலிங்கம் குழுவினருக்கு பொலிஸார் அறிவுறுத்தி விடுதலை செய்துள்ளனர்.இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்க அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் 2 மணி நேரத்திற்கு மேல் காவல் நிலைய சிறைக்கூண்டில் அடைக்கப்பட்ட தாம் கடுமையாக எச்சரிக்கப்பட்டு...

All posts loaded
No more posts