Ad Widget

யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் இடைநீக்கப்பட்டு தற்காலிகமாக அமைச்சுக்கு இடமாற்றம்

யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர்   பணிப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தொடர்புபட்டுள்ளது நிரூபணமானதையடுத்து நீதியானதொரு விசாரணையினையினை மேற்கொள்ள வேண்டும் எனவே பணிப்பாளரை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியில் இருந்து இடை நிறுத்த வேண்டும் என யாழ் வைத்தியர் சங்கம் தாய்ச்சங்கத்தின் ஊடாக சுகாதார அமைச்சினை கேட்டிருந்தது.

ஆனாலும் சுகாதார அமைச்சில் இருந்து சரியானதொரு பதில் கிடைக்காததை அடுத்து வைத்தியர் சங்கம் பல தடவைகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.அதனடிப்படையில் பணிப்பாளர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து முறையான விசாரணைகளை தொடர்வதற்காக பணிப்பாளரை சுகாதார அமைச்சு மீளவும் அழைத்துள்ளது. இருப்பினும் நாளைய தினம் வடமாகாணம் முழுவதும் திட்டமிட்டபடி நடாத்தப்படவிருந்த தொழில் சங்க நடவடிக்கை சுகாதார அமைச்சின் நடவடிக்கையினையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் விசாரணை முழுமையாக முடிக்கப்படாது, ஊழல் குற்றச்சாட்டுடைய யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் மீளவும் நியமிக்கப்படும் பட்சத்தில் முன் அறிவித்தல் எதுவுமின்றி தொழில் சங்க நடவடிக்கையானது முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts