பழைய வரலாற்றைத் திருப்பி உருவாக்காமல், உங்கள் படிப்பில் அக்கறை செலுத்தவும்;யாழ் இளவரசன் கனகராஜா!

இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சமாதானம் சுபீட்சத்தை சந்தோஷத்தை கொண்டு வரவேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பற்றியும் யாழ் றோயல் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் றேமியஸ் கனகராஜா தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரன் மீது அசிற் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (more…)
Ad Widget

யாழ்.வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி

யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி என்.ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இந்திய வியாபாரிகள் யாழில் வியாபாரம் செய்ய தடை

யாழ். மாநகர சபை எல்லைக்குள் இந்திய வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.அத்துடன் நடை பாதை வியாபாரமும் யாழ். மேயரினால் தடைசெய்யப்பட்டுள்ளது என யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார். (more…)

மாணவர் விடுதலை வலியுறுத்தி – தேசிய மாணவர் இயக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தேசிய மாணவர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துண்டுப் பிரசுர விநியோக நடவடிக்கையொன்று கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)

இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு!

யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் நேற்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர். (more…)

நல்லூர் ஆலய முன்றலில் பதிதாக காவலரண் அமைத்து காவலில் இருக்கும் இராணுவத்தினர்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் திடீரென இராணுவ கவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.நேற்று வருடப்பிறப்பாகையால் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் திடீரென ஆலயச் சூழலில் இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். (more…)

இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்க ஏற்பாடு

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 490 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கான நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (more…)

வட மாகாண சபையின் புதுவருட ஆரம்ப நிகழ்வுகள் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

வட மாகாண சபையின் புதுவருட ஆரம்ப நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் 01 ஜனவரி 2013 அன்று காலை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கொடியேற்றல் நிகழ்வினை அடுத்து இரண்டு நிமிட வணக்கத்துடன் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது. (more…)

யாழில் பிரபல போதைப் பொருள் விநியோகஸ்தர் ஒருவர் கைது

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை யாழ். நகரில் வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவரான இவர் (more…)

உயர்கல்வி அமைச்சருடன் பல்கலைக் குழு நாளை சந்திப்பு

யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது குறித்து பல்கலை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நாளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகளும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். (more…)

கோப்பாய் விபத்தில் இருவர் காயம்

யாழ். கோப்பாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். மானிப்பாய் வீதியில் இருந்து வருகை தந்த பவுசர் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்த வருகை தந்த மோட்டார் சைக்கிளும் கோப்பாய் சந்தியை கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

யாழ். பல்கலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முற்றாக நீக்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை அங்கிருந்து விலக்கியுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார்.பொலிஸ் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் (more…)

காஸ், மின்கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

காஸ் மற்றும் மின்கட்டணம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், காஸ் மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கவில்லை

அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. (more…)

இலங்கையில் விவாக பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

விவாகப் பதிவுக் கட்டணங்களை இன்று 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி இதுவரை நடைமுறையில் ஆயிரம் ரூபாவாக இருந்த விவாகப் பதிவுக் கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளது. (more…)

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

யாழ். சுழிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விளையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞன் சனசமூக நிலையத்தில் மின்குமிழ் ஒன்றை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி நேற்று மாலை 5 மணியளவில் பலியாகியுள்ளார். (more…)

கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு யாழ். பல்கலை நிர்வாகம் கோரிக்கை; மாணவர் மறுப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டமொன்று, கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான (more…)

யாழ். தனியார் பஸ் சேவை வழமைக்கு திரும்பியது

கைகலப்பில் ஈடுபட்ட பஸ் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்ததை தொடர்ந்து தனியார் பஸ் சேவைகள் நேற்று 3 மணியுடன் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார். (more…)

இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெளிமாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கடமைக்கு சென்ற ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் கடமையாற்றுவதற்கு அனுமதிகள் மறுக்கப்படுவதாக கூறி ஆசியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக (more…)
Loading posts...

All posts loaded

No more posts