Ad Widget

1000 ரூபா நன்கொடை தரவேண்டும்! யாழில் காவியுடை அணிந்த இருவரால் மக்கள் அச்சுறுத்தல்!

கடந்த சில நாட்களாக யாழ். சங்கானைப் பகுதியில் பிக்குகளின் உடையணிந்த இருவரும் சிவில் உடையணிந்த ஒருவரும் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்து வருகின்றனர்.இவர்கள் திருகோணமலையில் வசிக்கின்ற அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாகக் கூறி திருகோணமலை அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்களின் இலட்சினைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்களையும் காண்பிக்கின்றனர்.இவர்கள் மூவரும் தமக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் நன்கொடை தருமாறு கூறி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

பௌத்த பிக்குகளின் உடையணிந்த இருவர் திருகோணமலையில் வசிக்கின்ற அநாதைப் பிள்ளைகளுக்கு சங்கானைப் பகுதியில் நிதி சேகரித்து வருகின்றனர்.

ஆயிரம் ரூபாவுக்குக் குறைவாக அன்பளிப்புச் செய்கின்றவர்களை அதிக பணம் தருமாறும் இவர்கள் மிரட்டுகின்றனர்.

இதேவேளை சில பகுதிகளில் நயினாதீவு அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாகவும் முரண்பட்ட தகவல்களை வழங்குகின்றனர்.

இவர்களுடன் தமிழ்மொழி தெரிந்த சிவில் உடை அணிந்த ஒருவரும் இணைந்து செயற்படுகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இவ்வாறு வீடு வீடாக நன்கொடைக்காக பணம் பெறும் இவர்கள் குறைந்த பணம் கொடுப்போரை அச்சுறுத்தி வருகின்றனர்.

மேலும் நன்கொடைப் பட்டியலை காண்பிக்கும் பொழுது ஆயிரம் ரூபா கொடுத்த ஒருவரை நான்காயிரம் ரூபா தந்தவர் ௭னவும் காண்பிக்கின்றனர்.

மேலும் ஒருசில வீடுகளில் திருகோணமலையில் வசிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கு ௭னவும் வேறு சில வீடுகளில் நயினாதீவில் வசிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கு ௭னவும் கூறி மக்களை ஏமாற்றியும் வருகின்றனர்.

பணம் கொடுக்க மறுப்போரை அச்சுறுத்தி பணம் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் இவர்களை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பது மக்களின் வேண்டுகோளாகவுள்ளது.

Related Posts