- Wednesday
- April 8th, 2026
வட மாகாண அஞ்சல் அதிகாரிகளுக்கு வருடாந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரி கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவிலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் முன்னிலையில் உள்ளன. (more…)
தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர்களான ஏக்கநாயக்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் ஜமாஅத் நிர்வாகத்திடம் வாக்குறுதி அளித்துள்ளனர். (more…)
வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)
நாளைமுதல் பேரூந்துகளில் யாசகம் செய்வது மற்றும் பணம் பெறுவது முற்றாகத் தடைசெய்யப்படுமென தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண இதனை தெரிவித்துள்ளார். (more…)
வலி.வடக்கில் 23 வருடங்களாக தேசியபாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி மறுத்துவரும் படையினர், தற்போது அந்தப் பகுதியில் 180 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்முறை ரீதியான விவசாய நட வடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. (more…)
திமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய பல்கலைக்கழகங்களில்; சேர்த்துக்கொள்வதற்காக ஒப்புக்கொண்ட அளவுக்கு சில மாவட்டங்களில் போதியளவு மாணவர்கள் இல்லாத குறையை நிரப்புவதற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து மாணவர்களை சேர்ப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. (more…)
பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலைக் காவலாளியொருவரை இன்று வியாழக்கிழமை காலை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)
மகாத்மா காந்தியின் 65 ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.வட இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. (more…)
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள வரணிப் பகுதியில் 9 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
பல்கலைக்கழகத்திற்கு அதிகளவு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளார். பெணடிக் வீதியைச்சேர்ந்த 21 வயதான நபரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார். (more…)
வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்களின் வீடுகள் படையினரால் இடிக்கப்படுவதாக பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் முறையிட்டுள்ளனர். (more…)
உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துன்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதினொன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது.மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான...
2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்ள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேருகளை நாளை வியாழக்கிழமை...
உலக நாயகன் கமல்ஹாஸன் தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தடை விதித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று இரவு 10.20க்கு தீர்ப்பு வழங்கியிருந்தது. (more…)
'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (more…)
மல்லாகம் கோணப்புலம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். (more…)
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதிக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இம்மாதம் 27ம் திகதி இடம்பெற்றது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
