தாயகத்தில் எங்களை நாங்களே ஆளவேண்டும் இராணுவம் இங்கிருந்து வெளியேற வேண்டும்

எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார். யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்.பல்கலைக்கழக சூழலிலிருந்து படையினர் விலகிக்கொள்வர் :- கட்டளைத் தளபதி

Ad Widget

நீதவானின் பணப்பையினை ‘பிக்பொக்கட்’ அடித்த இருவருக்கும் விளக்கமறியல்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து நேற்றுக்காலை வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் பணப்பையினை பிக்பொக்கட் அடித்ததாக கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . (more…)

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் விடுதலை; ஏனையவர்கள் எப்போது?

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறீலங்கா பயங்கரவாத தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படடதைக் கண்டித்து ஐ.நாவுக்கு மகஜர்

யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், சிவில் சமூகம், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது மக்களின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்று ஐநாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. (more…)

“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”: யாழ். ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்

இ.போ.ச. பருத்தித்துறைசாலை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர். (more…)

நலன்புரி நிலையங்களை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்.மாவட்டத்தில் தற்போதும் இயங்கி வரும் நலன்புரி நிலையங்களை திருத்தியமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மொஹமட் ஜெப்ரி நியமனம்

யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.சி.எம். மொஹமட் ஜெப்ரி நேற்றைய தினம் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். (more…)

பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறப்பு; அல்லைப்பிட்டி, புங்குடுதீவில்

அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார். (more…)

வீதி அகலிப்பின்போது சுகாதாரச் சீர்கேடுகள்; கவனிப்பார் இல்லையா என்று மக்கள் விசனம்

பிரதான வீதிகளின் அகலிப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவற்றைத் தடுப்பதற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (more…)

வலுவிழந்தோருக்கு உதவுங்கள்; விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் கோரிக்கை

விசேட தேவையுடையோரின் இன்னல்கள், இடையூறுகளை எடுத்துக்கூறி எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது தேவைகளை நிறைவேற்ற எம்முடன் கைகோர்த்து நின்று செயற்படுங்கள். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் வி.கனகசபை இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். (more…)

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; தா. பாண்டியன் கோரிக்கை

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

மாணவர்களை விடுதலை செய்து பல்கலைச் சூழலையும் கற்றலுக்கு ஏற்றது போல மாற்றுங்கள்; யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் துணைவேந்தரிடம் கோரிக்கை

இராணுவம் மற்றும் பொலிஸாரின் தலையீட்டினை பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கி மாணவர்களது கற்றல் நடவடிக்கைக்கு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் துணைவேந்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

யாழ். பல்கலை துணைவேந்தர் – கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க சந்திப்பு!

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவிற்கும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று பலாலியில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் 4 பேருடைய விடுதலை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

சாரதிகளிடம் கொத்து ரொட்டியும் சாராயமும் கேட்கும் போக்குவரத்து பொலிஸார்!

ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களிடம் கொத்து ரொட்டியும் சாராயமும் வாங்கித் தருமாறு யாழ். குடாவில் பொலிஸார் கேட்பதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பாலும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.. (more…)

ஒருமணி நேரப் பணிப் பகிஷ்கரிப்பிற்கு த.தே.கூட்டமைப்பின் இளைஞர் அணி அழைப்பு

கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும், தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் நாளை நடத்தவுள்ள சாத்வீகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு இளைஞர் அணி அழைப்பு விடுக்கிறது. நாளை பகல் 11.00 மணி முதல் 12.00 மணிவரையான ஒரு மணி நேரத்தில்...

யாழ். பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கிழக்கு பல்கலை. மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டும் கண்டன போராட்டம் தற்பொழுது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. (more…)

பொலிஸ் நிலையமாகிறது பளை சோதனை நிலையம்

பளை பொலிஸ் சோதனை நிலையம் இந்த மாத இறுதிக்குள் பொலிஸ் நிலையமாக செயற்படவுள்ளது. இதுவரை காலமும் பொலிஸ் கனிஷ்ட உத்தியோகத்தர் (சார்ஜன்) தலைமையில் 10 பேருடன் இயங்கிவந்த பொலிஸ் சோதனை நிலையம் விரைவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 80 உத்தியோகத்தர்களுடன் முழுமையான பொலிஸ் நிலையமாக இயங்கவுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts