Ad Widget

பல்கலைச் சூழலில் மேலும் இராணுவப் பிரசன்னம்; அச்சத்தில் விடுதி மாணவர்கள்

பல்கலைக்கழக சூழலில் படையினரின் பிரசன்னம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.பல்கலைக்கழகம் மற்றும் விடுதிச் சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னம் மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதனால் விடுதியில் உள்ள மாணவர் மத்தியில் அச்சத்தினை தோற்றிவித்துள்ளது.

கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பல்கலை விடுதி மற்றும் பல்கலை வளாகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டமையினை அடுத்து பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் நேற்று முன்தினம் குவிக்கப்பட்ட இராணுவத்தினர் மீளவும் எடுக்கப்பட்டனர். எனினும் பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் வழமைக்கு மாறான முறையில் மேப்ப நாய்களுடன் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விடுதியில் தற்போதுள்ள மாணவர்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதற்கமைய இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ எந்தநேரத்திலாவது விடுதிக்குள் நுழையலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல்கலைக்கழக சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொலிஸாரினால் வீதியில் செல்வோர் சோதனையிடப்பட்டு அனுப்பப்படுகின்றனர். இதனால் போக்குவரத்தில் ஈடுபடுவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் தமக்கான உணவினைக் கூட வெளியில் சென்று பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இவர்களது செயற்பாடுகள் அச்சநிலையினைத் தோற்றுவித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts