அல்வாய் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். அல்வாய் பகுதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து ஆணிணொருவரின்; சடலம் சனிக்கிழமை (27) காலை மீட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தை சேர்ந்த குடும்பஸ்தரான செல்லையா மகாலிங்கம் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை நெல்லியடி...

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப்போவதில்லை – மைத்திரிபால

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நான் உருவாக்கும் புதிய அரசில் தேசிய பாதுகாப்புச் சபையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் இராணுவத்தை அகற்றுவதற்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்கள், முப்படை தளபதிகள் வெளிநாடுகளில் தூதர்களாக செயற்படுகின்றனர். எனது...
Ad Widget

தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களை பறிகொடுத்த 2014

பாலு மகேந்திரா, பாலச்சந்தர் உள்ளிட்ட முன்னணி தமிழ் திரைப்பட கலைஞர்கள் 2014ல் விண்ணுலகம் சென்றுள்ளனர். அதில் பெரும்பாலானோர் படைப்புகள் காலம் கடந்தும் சாகா வரம் பெற்றவை. அந்த இமயங்களின் பெயர்களை அவர்களின் படைப்புகள் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் இறந்தும் சாகாவரம் பெற்றவர்கள்தான் இந்த கலைஞர்கள். ஆம்.. கலைஞர்கள் மறையலாம், ஆனால் அவர்களின்...

நாட்டின் ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் – சிவாஜி

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள், தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவரையும் சுட்டிக்காட்டக்கூடாது எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டின் 7ஆவது...

நாட்டுக்கு ஏற்படப் போகும் அழிவைத் தடுக்கவே சகல கட்சிகளும் இணைந்தன! மைத்திரி வெல்வது உறுதி!!

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது. இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார். - இவ்வாறு முன்னாள்...

தேர்தல் பிரசார பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்படும் பதாகைகளை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவித்தாட்சிகரும் மாவட்டச் செயலாளருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். தேர்தல் நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல்...

தேர்தல் ஆணையாளரின் அறிவித்தல் வந்தவுடன் புது உறுப்பினர் நியமனம் – மாவை

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிலவும் இரண்டு உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடமிருந்து அறிவித்தல் வந்தவுடன் நியமிக்கப்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், 16 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்)...

விபத்தில் பெண் பலி: வாகனத்தை அடித்து நொறுக்கிய மக்கள்

யாழ். கொடிகாமம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 04.15 அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான சுதன் சுதா (வயது 35) என்பவரே பலியாகியுள்ளார். மேலும் இதன்போது உ.சுதர்சினி (வயது 20) எனும் பெண் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது...

யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்

யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. குறித்த பயிற்சி முகாமை நடாத்துவதற்கு என கொழும்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சியாளர்களுடன் இலங்கை சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் வருகை தரவுள்ளார். எனவே இந்த பயிற்சி முகாமிற்கு யாழிலுள்ள அனைத்து பாடசாலை...

மோசமான காலநிலையையடுத்து சிவப்பு அறிவித்தல்!

நாட்டில் நிலவுகின்ற மிக மோசமான காலநிலையை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரை கரையோரபகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மலையகத்துக்கான ரயில் சேவைகள் முற்று முழுதாக இரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. அத்துடன், மட்டக்களப்புக்கான...

இ-ரீடர்கள் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்

இ-ரீடர்ஸ் (E-Readers) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலத்தில்...

பெஷாவர் தாக்குதலைத் திட்டமிட்டவர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தியுள்ளத் தாக்குதல்களில், திவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் முதல் தாக்குதல் வடக்கு வாசிரிஸ்தான் பகுதியிலுள்ள குண்ட் கிராமத்திலுள்ள பஞ்சாபித் தாலிபான்கள் இருந்த வளாகத்தின் மீது நடத்தப்பட்டது. அதில் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அதே பகுதியில் உஸ்பெக் தீவிரவாதிகள்...

மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இராணுவம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று...

பதுளையில் மண்சரிவு; 19 பேர் பலி

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக மழை வெள்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கி இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகளில் சிக்கி, 19 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எல்.எம். உதயகுமார கூறினார். இவர்களில் 11 பேரின் சடலங்கள்...

சிவகார்த்திகேயனை மனம் திறந்து பாராட்டிய அஜித்!

அஜித் ஒருவரை பாராட்டுகிறார் என்றால் அதை என்றுமே பப்ளிக்காக அறிக்கை விட மாட்டார். தனக்கு பிடித்தால் உடனே அந்த நபருக்கு போன் செய்து பாராட்டுவாராம். அந்த வகையில் மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் லுக்கை பார்த்த அஜித் மிகவும் பாராட்டியுள்ளாராம். ஆனால், இதை சிவகார்த்திகேயன் கூறவில்லை.அந்த படத்தில் பணியாற்றிய காஸ்டியூம் டிசைனர் ஒரு முன்னணி நாளிதழ்...

மின்கம்பத்தை மோதித் தள்ளிய இராணுவ வாகனம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தினால் நுணாவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளுக்கான மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தெல்லிப்பழையில் சுனாமி நினைவு

மீண்டும் எழுவோம் சுனாமிப்பேரலையின் கோர நிகழ்வுகள் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று காலை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள சிற்பாலய கலைக் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுனாமி சிற்பத்தின் முன்பாக வழிபாடு இடம்பெற்று சுனாமிப் பேரலையில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டு மறைந்த சிற்பக் கலைஞன் ஏ.வி.ஆனந்தனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக...

வடக்கில் மஹிந்தவுக்கு இம்முறை அமோக ஆதரவு கிடைக்கும் என்கிறார் அமைச்சர் பீரிஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் தமிழ் ஊடகங்களில் ஆசிரியர்களுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி...

தமிழர்களின் வாக்குகளுக்காக மஹிந்த இரட்டைவேடம் போடுகிறார்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ இரட்டை வேடம் போடுகிறார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால் மாறாக மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர்...

கிளிநொச்சி மாவட்ட வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வெளிக்கள பெண் அரச உத்தியோகத்தர்களுக்கு ஜம்தாயிரம் ரூபாவிற்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரின் கவனத்திற்கு குறித்த உத்தியோகத்தர்களினால் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அரச வெளிக்கள பெண் உத்தியோகத்தர்களுக்கும் விரைவாக மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வகையில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்...
Loading posts...

All posts loaded

No more posts