- Saturday
- May 9th, 2026
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 441 ஓட்டங்களை பெற்றது. பதில் அளித்த இலங்கை 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பின்னர் பொலோன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 407 ஓட்டங்களைப்...
பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்த முடிவு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை அடுத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித்...
பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வடக்குக்கான தேர்தல் பரப்புரைக்கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. 30ஆம் திகதி காலையில் மன்னாரிலும், மதியம் வவுனியா கலைமகள் வித்தியாலயத்திலும், பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பிலும் இந்த பரப்புரைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,...
ஒன்பது மாகாணங்களில் காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் தவிர, 22 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் 24பேர் உயிரிழந்துள்ளதுடன் 281,767 குடும்பங்களைச் சேர்ந்த 1,016,749பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் வெள்ளம்,...
இயற்கை அனர்த்தங்களால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம்...
இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் பறந்த வழியில் காணாமல்போயுள்ள ஏர் ஏஷியா நிறுவனத்தின் பயணிகள் விமானத்தை வான் வழியாக தேடும் பணிகளை, இரவு சூழ்ந்துவிட்டதால் இந்தோனேஷியா இடைநிறுத்தியுள்ளது. போர்னியோவுக்கு தென்மேற்காகவுள்ள கடற்பரப்பில் விமானம் தொடர்பை இழந்திருந்த இடத்தில், இந்தோனேஷியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் கிளம்பிய இராணுவ விமானங்கள் தேடிவந்தன. மோசமான வானிலை நீடித்தாலும் வெளிச்சம் குறைவாக இருந்தாலும்...
கர்நாடகாவில் மைசூர் அரண்மனையை அடுத்து இரண்டாவது பெரிய அரண்மனையாக கருதப்படுவது லலிதா மஹால் அரண்மனை. சாமுண்டி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தின் சில காட்சிகள்கூட இந்த அரண்மனையில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின்...
கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஜீத்...
முஸ்லிம்காங்கிரஸ் அரசில் இருந்து விலகி எதிரணி சனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுதெரிவித்துள்ள நிலையில் கிழக்குமாகாணசபை யில் இருந்த அவர்களது 7 இடங்களும் எதிரணிக்கு ஆதரவாகி உள்ளது. இந்நிலையில் 37 இடங்களை கொண்ட கிழக்கு மாகாணசபை எதிரணிகள் வசம் வந்திருக்கிறது. அரசு சார்பில் 12 உறுப்பினர்களும் கூட்டமைப்பு சார்பில் 11 இடங்களும் ஐதேக சார்பில் 4 இடங்களும் உள்ளன. ரிசாத்...
யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் காணாமல்போயுள்ளது. இந்தோனேசியாவின் சுரயபோ நகரிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பயணிகளுடன் சென்ற எயர்ஏசியா விமானசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமே காணாமல் போயுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடைந்திருக்க வேண்டும் என்றும் அதிகாலையுடன் QZ 8501 விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட அறிவிப்பை...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளை அசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன. சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக...
மத்திய அரசின் தலையீடுகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் மாகாண அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரேயொரு துறையாக இன்று வடக்கு மாகாண சபைக்கு இருப்பது கூட்டுறவுத்துறைதான். அந்தவகையில், ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தில் கூட்டுறவுத்துறை விரைவில் மறுசீரமைக்கப்பட உள்ளது என்று வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். கூட்டுறவு அமைச்சுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி...
இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார். அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சையின் பின்னர் இன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்பியுள்ள நிலையில்,சனாதிபதித்தேர்தல் தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக தெரியவருகிறது. இரண்டு வேட்பாளர்களும் வடக்கில் இருந்து இராணுவத்தினை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பிலான அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்படுகின்றது....
யாழ். பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் வழக்கு இலக்கம் இனங்காணப்படாத துவிச்சக்கர வண்டிகளின் இவ்வருடத்துக்கான பகிரங்க ஏலவிற்பனை சனிக்கிழமை (27) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிமன்ற சுற்றுநிருபம் 5/2013இன் பிராந்திய மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைவாக பிராந்திய ரீதியாக அறிவித்தல் வெளியிட்டு பகிரங்க ஏலவிற்பனை செய்வதற்கு நீதிஅமைச்சு வழங்கிய அனுமதியின் பிரகாரமே இந்த ஏல விற்பனை நடைபெற்றது....
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற நாம் இதுவரை காலமும் போராடினோம். போராடி வருகின்றோம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் செய்யவில்லையென சோசலிய சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜிசிறிவர்தன தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை...
Loading posts...
All posts loaded
No more posts
