Ad Widget

8 நாட்களில் 24பேர் பலி : 10 இலட்சம் பேர் பாதிப்பு

ஒன்பது மாகாணங்களில் காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் தவிர, 22 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் 24பேர் உயிரிழந்துள்ளதுடன் 281,767 குடும்பங்களைச் சேர்ந்த 1,016,749பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் வெள்ளம், மண்சரிவு, கடும்மழை போன்ற காரணிகளால் மேற்படி பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இவ் அனர்த்தங்களில் சிக்கி 16பேர் காயமடைந்துள்ளதுடன் 8பேர் காணாமல் போயுள்ளனர். 4,593 வீடுகள் முழுமையாகவும் 14,649 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 31,188 குடும்பங்களைச் சேர்ந்த 106,788பேர், 568 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணம்

வடமாகாணத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 19,895 குடும்பங்களைச் சேர்ந்த 70,315பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 99வீடுகள் முழுமையாகவும் 3574வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 4,490 குடும்பங்களைச்சேர்ந்த 16,172பேர், 99 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்தில் 2பேர் உயிரிழந்ததுடன் 12பேர் காணாமல் போயுள்ளனர். 4,630 குடும்பங்களைச் சேர்ந்த 15,282பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 78வீடுகள் முழுமையாகவும் 803 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 2167குடும்பங்களைச்சேர்ந்த 7078பேர், 84 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

வடமேல் மாகாணம்

வடமேல் மாகாணத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 10,832 குடும்பங்களைச் சேர்ந்த 38,397பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 52வீடுகள் முழுமையாகவும் 129வீடுகள் பகுதியளவிலும்; சேதமடைந்துள்ளதுடன் 3,949குடும்பங்களைச்சேர்ந்த 13,416பேர், 86 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணத்தில் 4பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அங்கு 228,677 குடும்பங்களைச் சேர்ந்த 828,212பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 4,197வீடுகள் முழுமையாகவும் 9,137வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 14,355குடும்பங்களைச்சேர்ந்த 48,147பேர் 174 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

வடமத்திய மாகாணம்

வடமத்திய மாகாணத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12,057 குடும்பங்களைச் சேர்ந்த 42,601பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 144வீடுகள் முழுமையாகவும் 722வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 3,406குடும்பங்களைச்சேர்ந்த 10,954 பேர், 66 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

ஊவா மாகாணம்

ஊவா மாகாணத்தில் 14பேர் உயிரிழந்ததுடன் 2பேர் காயமடைந்தும் 7பேர் காணாமல்போயுள்ளனர். 3,124 குடும்பங்களைச் சேர்ந்த 11,444பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 07 வீடுகள் முழுமையாகவும் 110 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 2,202 குடும்பங்களைச்சேர்ந்த 8,116 பேர் 67 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்

சப்ரகமுவ மாகாணத்தில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 631பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 12 வீடுகள் முழுமையாகவும் 117 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் 12 குடும்பங்களைச்சேர்ந்த 52பேர் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

மேல் மாகாணம்

மேல் மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 9,038பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 13வீடுகள் முழுமையாகவும் 14 வீடுகள் பகுதியளவிலும்; சேதமடைந்துள்ளதுடன் 412 குடும்பங்களைச்சேர்ந்த 2403 பேர், 05 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

தென் மாகாணம்

தென் மாகாணத்தில் 268 குடும்பங்களைச் சேர்ந்த 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 21 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவிலும்; சேதமடைந்துள்ளதுடன் 195 குடும்பங்களைச்சேர்ந்த 450 பேர், 03 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உலருணவுப்பொருட்கள் மற்றும் ஏனையை அத்தியாவசிய பொருட்களை வழங்க, அந்தந்த மாவட்டசெயலகங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts