- Thursday
- May 14th, 2026
வடகொரிய தலைவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் யொன்- சொல், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியன்று நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன்னால் விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் மரண தண்டனைக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்....
யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றம் ஏற்பாட்டில் நாளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.சுமந்திரன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 15.5.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ” வெளியில் தமிழர்களுக்கு...
யாழ்.பல்கலைக்கழகத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மே 18 திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை பிரமாண்டமான முறையில் அனுஸ்ரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். தமிழீழ வரலாற்றில் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள், போராளிகளை அன்நாளில் ஒவ்வொரு தமிழ் மகனும், உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்க வேண்டும் என்றும் அவர்...
இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக அமையும். இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த புதிய பூமித் தட்டுப்பகுதி காணப்படுகின்றது. 50 மில்லியன் ஆண்டுகளாக...
ப்ளாஸ்ரிக் தராசுகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான தராசுகளை உபயோகிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுத்தல் அளவைச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரேமசிறி குமார தெரிவித்தார். இவ்வாறான தராசுகளில் நிறுக்கப்படும் தின்பண்டங்களை வாங்குவதை தவிர்த்து கொள்ளுமாறு நுகர்வோரிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. முத்திரையிடப்பட்ட தராசுகள் வர்த்தக...
யாழ்.புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுப் புதன்கிழமை...
சமுர்த்தி முத்திரை வழங்குவதற்கான மீளாய்வின் போது தெரிவு செய்யப்படாமல் பாதிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, புதன்கிழமை (13) சந்தித்து முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமது பாதிப்புக்களை எடுத்துக் கூறியுள்ளனர். யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர்...
உள்ளூராட்சி மன்றங்களில் கீழ் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் மத்திய அரசோ அல்லது மாகாண அரசோ இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களை விடுத்து துறைசார்ந்த நிபுணர் குழுவை விசாரணைக்கு நியமித்து இந்த ஊழல் மோசடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரைநகர்...
மனித உரிமை பாதுகாப்பாளர்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதோடு அச்சுறுத்தல்களுக்கும் உட்படுவதாக மனித உரிமை பாதுகாப்பாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர். மனித உரிமை பாதுகாப்பாளர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டியை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (13) மனித உரிமை ஆணைக்குழு யாழ். காரியாலயத்தில் இடம்பெற்றது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் மற்றும் கல்வி...
கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்தியாவிற்கு சென்று அங்கு அகதிகளாக வாழ்ந்து வந்த சிலர் நேற்று (13) நாடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த சுமார் 32 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இவ்வாறு நேற்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்...
ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உணர்வுபுர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக...
துன்னாலை பூதராயன் வீதியில் வீதி விளக்குகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த, கரவெட்டிப் பிரதேச சபை மின்சார ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 12.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் கரணவாய், அண்ணா சிலையடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி சுதர்சன் (வயது 42) என்பவரே உயிரிழந்தார். இவரது சடலம்...
இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை சீனன்குடாவைச் சேர்ந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (12) மாலை காங்கேசன்துறையை வந்தடைந்ததாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யபட்ட இந்த மீனவர்கள், இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். வரஹே நுவான் சானக (வயது 24), ரவுன்ரா...
பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்மைலி ஷியா முஸ்லிம்களை பஸ் வண்டியொன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, கராச்சி நகரில் அப்பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 06 துப்பாக்கிதாரிகள், மேற்படி பஸ்...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 37பேரையும் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மல்லாகம் சந்திக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை, இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த முதியவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய வாகனத்தையும், அதன் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம் (வயது 54) என்பவரே இந்தவிபத்தில் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை, வயோதிபரை...
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தங்களில் 43 பேர், 10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக...
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாதி 6 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியவர், 4 நாட்களின் பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சி பூநகரியில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. பூநகரி வேரவிலைச் சேர்ந்த வன்னியசிங்கம் யஸ்ரின்பிலிப் (வயது 31) என்பவரே உயிரிழந்தார். இது பற்றி தெரியவருவதாவது, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட...
வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வவுனியாவில் நேற்று மாலை வேளை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் - வவுனியா வீதி, பண்டாரிகுளம்- வேப்பங்குளம் வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ஏ9 வீதி என்பன கடும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்தன. இதனால் ஒரு மணி நேரம்...
"எனது மீள்வருகை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக என்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கின்றது." - இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. "பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால், சவால்களுக்கு முகம்கொடுக்க நான் தயார்" - என்றும் அவர் கூறியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
