- Saturday
- May 16th, 2026
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே சம்பந்தன் மேற்படி கூறியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரர்...
இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ தலைமையில் இடம் பெறும் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்...
வடக்கின் பிரபல தொழிலதிபரும், உள்ளூர் உற்பத்தித் துறையில் தடம் பதித்தவருமான அண்ணா கோப்பி நிறுவனர் பொ.நடராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது 69 ஆவது அகவையில் காலமானார். இணுவில் தெற்கினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவராவார். தமது சுய முயற்சியால் வீட்டில் கோப்பியைத் தயாரித்துத் தாமே அதனைத் துவிச்சக்கர வண்டியில்...
இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையில் ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஏற்றுமதி மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பில் தான் கலந்து பேசியதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான சிறுதூர...
சுன்னாகம் நிலத்தடி நீர், கழிவு எண்ணெய் கலந்ததால் மாசடையவில்லை. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினி கலப்பினாலேயே நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அதனால் இந்த நிலத்தடி நீர் மாசுக்கு நாம் காரணமில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர்...
தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக வௌியான தகவல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவி அத்தியவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க...
அச்சுவேலி இடைக்காடு பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யுவதியின் பெற்றோர், ஞாயிற்றுக்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார், திங்கட்கிழமை (06) தெரிவித்தனர். சனிக்கிழமை(04) மாலை வீட்டில் உள்ள அனைவரும் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது வீட்டிலிருந்த யுவதி காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ். மாவட்டத்தின் முதலாவது வேட்பு மனு, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை(06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென்னிலங்கை கட்சியான ஜனசக்தி பெரமுன கட்சியே திங்கட்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
முன்னாள் போராளிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்க வேண்டுமென்பது தான் எமது கோரிக்கை. அவர்களில் பலர் பல வருட அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.முன்னாள் போராளிகளை, இலங்கை அரசாங்கம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பங்குபற்றலாமென்று அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மேற்குலக நாடுகள் எம்மவர்கள் மேல் போட்டிருக்கும் தடைகள் நிரந்தரமாக எடுக்கப்படுமென்பதையும் நாம் முழுமையாக நம்புகின்றோம். இவ்வாறு...
நேற்று (5) வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி எழிழன் அவர்கள் சக்தி தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியான மின்னல் நிகழ்சியில் பங்கேற்பதை தடுக்க மாவையும் இந்தியாவும் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அனந்தி எழிழன் அவர்கள் தனக்கு பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைபின் சார்பில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது குறித்து தமிழரசுக்கட்சி மௌனம் சாதித்திருந்ததன் பின்னணியில்...
உள்ளூராட்சிமன்ற மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதுடன் அடுத்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, ஊர்வலங்கள் கட்அவுட்கள் போஸ்டர்களை...
உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கு ஊரெழு பகுதியினை சேர்ந்த யுவதியும், மல்லாகம் பகுதியினை சேர்ந்த இளைஞனும் ஐந்து வருடம் காதலித்துள்ளனர். இந்நிலையில், குறித்த யுவதிக்கு தெரியாமல், யுவதியின் வீட்டார் வெளிநாட்டு இளைஞனுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதனால் மனவிரக்தி அடைந்த யுவதி, காதலன் பணிபுரியும் இடத்திற்கு...
தமிழீழ விடுதலைப்புலிகளின் உயிர் ஆயுதங்கள் என்று போற்றப்படும் கரும்புலிகளின் நினைவு தினம் நேற்றாகும். கரும்புலி மாவீரர்களைப் போற்றி வணங்கும் இந்நாளில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி யாழ். பல்கலைக்களகத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினர். மூடிய அறைக்குள் இருவரும் மட்டுமே கலந்து கொண்ட இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிகாவின் 70 ஆவது பிறந்தநாளாகும். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன. இதன்போதே இருவரும்...
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய சிறப்பு நிகழ்வாக இந்து ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணம் நல்லூரில் ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறும். மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் மாநாட்டின் நிறைவு நிகழ்வில்...
எமது மக்களைப் பார்த்து தோற்றுப் போனவர்கள் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இன்று எமது மக்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நவபுரம் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெயரை, எக்ஸத் யஹபாலன ஜாதிக பெரமுன (ஐக்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) என...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா மற்றும் மேர்வின் சில்வா ஆகியோருக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று தெரியவருகிறது. இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் வேட்புமனு அனுமதி தொடர்பிலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை...
Loading posts...
All posts loaded
No more posts
