- Tuesday
- June 16th, 2026
முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
உலகின் புகழ் பெற்ற சுற்றுலா இதழான லோன்லி பிளானட் சஞ்சிகை (Lonely Planet Magazine's Dream Trips 2016) வௌியிட்டுள்ள முதல் பத்து சுற்றுலாத் தளங்களில் இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொடர்பான ஆலோசனை புத்தகங்களை, “லோன்லி பிளானட்“ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உலகளவில் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் குறித்த...
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ஓட்டங்களாக 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் பெற்று மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே இந்த இலக்கை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர்...
அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. நிலைமையை மாற்ற துப்பாக்கி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை குறைப்பது தொடர்பாக ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் அவர் “ 3 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பள்ளி குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு பைத்தியம்...
துருக்கியின் ஏகியேன் கடற்கரையில் குறைந்தது 34 குடியேறிகளின் உடல்கள் கரையொதிங்கியுள்ளதாக துருக்கிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பல சிறார்களும் அடங்குவர் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தக் குடியேறிகள் இரண்டு தனித்தனி படகுகளில் கிரேக்கத் தீவான லெஸ்போஸை அடைய முயற்சித்த போது, மோசமான வானிலை காரணமாக அந்தப் படகுகள் கவிழ்ந்தன என துருக்கிய ஊடகங்கள் கூறுகின்றன. துருக்கிய...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் எட்டுப் பேரையும், ஜெகதாபட்டணம் அருகே நான்கு பேரையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதன்படி தலைமன்னார் கடற்கரை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 651 விசைப்படகுகளில் 2,700-க்கும்...
அங்கம் -1 (குமார் பொன்னம்பலம் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இக்கட்டுரை தொடர் பிரசுரமாகிறது) குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் மூடப்பட்டு விட்டது. கொழும்பு நகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் மனித...
பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன கூறியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி எனப்படும் என்.டீ.டி வரி ஜனவரி மாதம்...
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கை ஜனநாயகத் தேசியக் குடியரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, மகாத்மா காந்தியின் பேரன்...
கடந்த வருடத்தில் H.I.V நோயாளர்கள் 225 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டைவிட 2015 ஆம் ஆண்டு இந் நோயாளர்கள், அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் இயக்குனர், மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதில் 27 கர்ப்பினி பெண்கள் உள்ளடங்குகின்றனர். 15 வயது முதல் 23 வயதான இளைஞர்களிடம் எயிட்ஸ் நோய்...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது ஓவர் போட்டியின் போது, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை 'தண்ணி' அடிக்க அழைத்தார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில். அதுமட்டுமா உங்கள் கண்கள் ரொம்ப அழகு என்று எசக்கு பிசக்காக பேட்டி அளித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று...
வடமராட்சி, பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் நிதியுதவியில் இவ்வருடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது குறித்து சாத்திய வள ஆய்வுகள் மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (04) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், நீரியல் வள அமைச்சின் அதிகாரிகள், அதன் கீழ் இயங்கும் துறைமுக...
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியதோடு, 3-1 என, தொடரையும் இழந்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தின் Bay Oval, Mount Maunganu மைதானத்தில் இன்று ஆரம்பமானது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய...
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்படி இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு...
பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார். பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறை அழைக்கும்போது நேரில் ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற 11ம் தேதி கோவை...
கஞ்சா, மதுபானம் மற்றும் இதர போதைவஸ்துக்களை பாவித்து சிறு பிரச்சினைகளை ஏற்படுத்திப் பின்னர் அதனை சமூகப் பிரச்சினையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர் என யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் கடந்த 2ஆம், 3ஆம் திகதிகளில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்று அப்பகுதியில் பதற்ற நிலைதோன்றியது. இதனையடுத்து, பொலிஸாரின்...
பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடும் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. அதன்போது, தற்போதிருக்கின்ற அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகின்றது. அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்துகொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன...
வடக்கு மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுத்து அவர்களை மீள்குடியேற்றவும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போல உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் சமூக முறைமையை ஏற்படுத்துவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த பொருளாதார சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டத்தை முன்வைத்து, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத அபிவிருத்தியை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த...
தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகரும் சட்ட வல்லுநருமான சிவா பசுபதி நிராகரித்து விட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அப்போது அவரை வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தொலைபேசி மூலம்...
நிலையான, ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, நியாயமான, செயற்படுத்தப்படக்கூடிய ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தை முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயருடனான சந்திப்பின் போது வலியுறுத்தினார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன். இலங்கை வந்துள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளயர் நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை...
Loading posts...
All posts loaded
No more posts
