Ad Widget

பொலிஸாரின் அசண்டையீனத்தால் 4 நாள்கள் வைத்தியசாலையில் காத்திருந்த சடலம்!

முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஜீவகுமார் செல்வகுமாரி (வயது 30) என்ற பெண் உயிரிழந்தார்.

இது குறித்து முல்லைத்தீவுப் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் பிரேத பரிசோதனைக்கு வராமையால் நேற்று செவ்வாய்க்கிழமை வரை சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டி துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

நேற்று முல்லைத்தீவுப் பொலிஸார் வந்த பின்னரே பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

பொலிஸாரின் இந்தச் செயல் குறித்து மரண விசாரணை அதிகாரி கவலை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் இடம் பெறாமல் பொலிஸார் நடந்துகொள்ளவேண்டும் எனவும் தொவித்துள்ளார்.

Related Posts