Ad Widget

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை – டி.ராஜேந்தர்

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு திரையுலகினர் யாரும் உதவ முன்வரவில்லை என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

பீப் பாடல் வழக்கில் நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

இந்த வழக்கில் காவல்துறை அழைக்கும்போது நேரில் ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வருகின்ற 11ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் நேற்று மாலை சிம்புவின் தந்தை டி.ரஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

என் மகனின் வாழ்க்கையில் திருப்பமான நாள் இன்று. அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படாத பீப் பாடலை தேவையில்லாமல் பூதாகரமாக்கிவிட்டார்கள்.

பீப் பாடல் எந்த திரைப்படத்திலும் இடம் பெறவில்லை. யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி, சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர்.

எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது.

பீப் விவகாரத்தில் நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, ரேகிணி, சுகாஷினி உள்ளிட்டோரைத் தவிர வேறு யாறும் உதவ முன்வரவில்லை என கூறினார். மேலும் எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, குறிப்பாக இறைவனுக்கு நன்றி என்றவர், பாடலை திருடி வெளியிட்டவர்கள் மீது நான் கொடுத்த புகாருக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Related Posts