- Tuesday
- June 16th, 2026
2015 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவற்றுக்கான மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, முடிவுகளில் திருப்தியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் சில பாகங்களில் குறிப்பாக வட, வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (05) ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் மத்திய சப்ரகமுவ மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம்...
யாழ். போதனா வைத்தியசாலையில் 2016 ஆம் ஆண்டு பிறந்த நான்கு நாட்களில் 30 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்கு உள்ளாகியிருந்து அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு 1339...
அரசியல் ரீதியான கட்சியாக தமிழ் மக்கள் பேரவை செயற்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரவையின் இலக்கு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும்...
மாதவன் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் தமிழ் படம் ‘இறுதிச்சுற்று’. இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சூர்யா, பாலா, சித்தார்த் ஆகியோர் பங்கேற்றனர்....
வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களில், உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய 22 பேரின் பதவி உயர்வுகளை வட மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு உரிய முறையில் வழங்குமா என பாதிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த 2010 ம் ஆண்டு வடக்கு கிழக்கில் கடமையாற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களுக்கான தடை தாண்டல் பரீட்சை மத்திய அரசினால்...
தமிழகத்தின் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் பெண் ஒருவர் தீக்குளித்துள்ளார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி ரோகினி (31). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரோகினி தனது...
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
இங்கிலாந்தின் சச்சக்ஸ் என்ற உள்நாட்டு கவுண்டி கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ ஹாப்டன் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 22. மேத்யூ ஹாப்டன் கடந்த 2014ம் ஆண்டு, சச்சக்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்தா். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக இங்கிலாந்து (மற்றும் வேல்ஸ்) கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது....
வெள்ளம் பாதித்த சென்னை மக்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக நடிகர் பார்த்திபன் பீப் என்ற புதிய பாடலை எழுதி, யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார். அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிம்பு மீதும், அனிருத் மீதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை...
நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைகழகங்களுக்கு இம்முறை 2000 தொடக்கம் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 2,000 வரையான மாணவர்கள் தொழிநுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழிநுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையில் பலாலி இராணுவத் தலைமையகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்களும், முப்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளனர். தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம்...
நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான நிலங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு - கிழக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவு நிலங்களை மக்களிடம் மீள ஒப்படைப்பேன் எனவும் உறுதியளித்துள்ளார். தென்பகுதி ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி நேற்று வழங்கிய பேட்டியிலேயே...
முகப்புத்தகத்தால் ஏற்பட்ட காதலால் நபர் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (03) தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக்கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும்,தான்...
கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காணிகளை சொந்தமாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் விழிப்படைந்த பொதுமக்கள் இன்று(04) வடமாகாண சபை உறுப்பினர்...
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன. பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்களிலிருந்து பஸ்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், இலங்கை போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய சேவைக்குச் சொந்தமான 57 பஸ்கள் மீது கல், போத்தல் மற்றும் இதர பொருட்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 710 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். 'வலிகாமம் வடக்கில் 5 ஆயிரத்து 500 ஏக்கர்களும் வலிகாமம் கிழக்கில் 210 ஏக்கர்களும் இவ்வாறு விடுவிக்கப்படவேண்டும். விடுவிக்கப்படாத காணிகளில்...
இரகசிய முகாம்கள், சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை. அவ்வாறான முகாம்கள் நடத்தவேண்டிய தேவை இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட...
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள பிற்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் கூட்டமைப்பின் அரசியல் பரப்பில் நமது தமிழ் முற்போக்குக் கூட்டணியும், பொது நிலைப்பாட்டை முன்வைத்து இணைந்து செயற்படலாம்' என, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் கணக்கில், இது தொடர்பில் கருத்தொன்றை பதிவேற்றம் செய்துள்ள அவர், அதில்...
Loading posts...
All posts loaded
No more posts



