Ad Widget

வடமாகாண பொது சேவைகள் ஆணைக்குழு பதவி உயர்வுகளை உரிய முறையில் வழங்குமா?

வட மாகாண உள்ளூராட்சி மன்றங்களில், உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய 22 பேரின் பதவி உயர்வுகளை வட மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு உரிய முறையில் வழங்குமா என பாதிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

கடந்த 2010 ம் ஆண்டு வடக்கு கிழக்கில் கடமையாற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி உதவியாளர்களுக்கான தடை தாண்டல் பரீட்சை மத்திய அரசினால் நடத்தப்பட்டு பெறுபெறுகளும் வெளியிடப்பட்டன.

இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு உரிய அலுவலர்களுக்கான தரம் ஒன்று தரம் இரண்டு பதவிகளை வழங்கியுள்ளன.

ஆனால் வட மாகாணத்தைப் பொறுத்த வரையில், இதுவரை இவர்களுடைய பதவி உயர்வுகள் சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் உரிய முறையில் மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுகின்றது.

உரிய அலுவர்களும் தற்போது தமது அடுத்த நடவடிக்கை என்னவென்று தெரியாது திண்டாடும் நிலைமையில் காணப்படுகின்றார்கள்.

Related Posts