- Tuesday
- June 16th, 2026
வடகொரியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு அதி பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததே காரணம் என்ற பகீர் தகவலை வட கொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அணு பரிசோதனைக் கூடம் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜு நகரின் வடமேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் புங்கேரி என்ற பகுதியில் அமைந்துள்ள அணு பரிசோதனை கூடத்தின் அருகே...
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் நடிக்கும் கொடி படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் தனுஷ். ஏற்கனவே இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ். இதனால் தனுஷ் - அனிருத்தின் 4 வருடக் கூட்டணி முடிவிற்கு வந்ததா? என்ற கேள்வி தமிழ்த்திரையுலகில்...
தமிழரின் பெருமையை உலக அரங்கில் கம்பீரமாக அரங்கேற்றிய கலைஞர்களில் ஒருவரான ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். உலகின் மிக பிஸியான இசைக் கலைஞனான அவருக்கு உலகமே இன்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ரோஜாவில் தொடங்கிய அவர் இசைப் பயணம், இன்று மொழிகள், நாடுகள் என்ற எல்லைகள் தாண்டி உலகெங்கும் வியாபித்து...
இன்று சர்வதேச வேண்டி தினம் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி ஆண்கள் வேட்டியணிந்த தங்களது புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ‘ஆள் பாதி ஆடை பாதி' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறப்படுவதுண்டு. ஒருவர் அணிந்துள்ள ஆடையைக் கொண்டே அவரது குணம், ரசனை, பொருளாதார...
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவினை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கை மீனவர் ஒருவரின் படகை, கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் ஒன்று மோதியுள்ளது. இதனால் இலங்கை...
தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016ம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா ஜனவரி 29 ம் தேதி தொடங்கி பிப்ரவாி 7 ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பம்சமாக வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை வைத்து விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டுள்ளது. நாவற்குழி 300 வீட்டுத்திட்டக் குடியிருப்புக்கு அருகில், கட லேரியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப் படையினருக்கான முகாம் அமைக்கும் பணிகள் சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேசிய...
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதைமுகாம்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட வீடுகளில் இருந்த தடயங்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதி கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து, கடந்த 29ம் திகதி முதல் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனை அடுத்து அப்பகுதிக்கு மக்கள்...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உப குழுவில் சிவா பசுபதியை பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு தொடர்பாகவும், அதனை அவர் நிராகரித்தது தொடர்பாகவும், வெளியான செய்திகள் விஷமத்தனமானவை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய...
நாட்டில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என அமைச்சர் தயா கமகே குற்றஞ்சாட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் தயா கமகே இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. இதனால் பலர்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதமொன்றையும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மன்னார் பிரஜைகள் குழு ஊடாக இன்று புதன்கிழமை...
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (05) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலுப்பையடி, வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான கந்தையா யோகரத்தினம் என்பவரே யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு கிளை காரியாலயத்தில் இம்முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். தனிமையில் வசித்து வரும் குறித்த மூதாட்டியின்...
கைதடி, கோப்பாய் வீதியில் அமைந்துள்ள பாலத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (05) இரவு 8.30 மணியளவில், இராணுவச் சிப்பாய் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை படை முகாமில் கடமையாற்றும், மறவன்புலத்தைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் (வயது 30) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இத்தாக்குதலில் காயமடைந்த...
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன், தன்னைக் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர்...
பின்தங்கிய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களுக்கு, பாதணிகளை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அடுத்த 5 வருடங்களுக்குள், கல்வித் திட்டங்களில் மாற்றஞ்செய்யப்படும். அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும், இரு பாடசாலைகள் வீதம், சகல வசதிகளுடனும் கூடிய பிரசித்த பாடசாலை போன்று அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு உண்டு எனத் தெரியவந்துள்ளது.அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ள வழக்கின் சந்தேக நபர் ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சம்பத் ப்ரித்விராஜ் என்ற நபரே இவ்வாறு தகவல்களை வெளியிட்டுள்ளார். ரவிராஜ் படுகொலைச் சம்பவத்தை கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டதாகவும்,...
"வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவற்றை மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றேன்."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். "மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கொள்கைகளுடன் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை இணைத்து வருகின்றார்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள...
மன்னர் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கும் இடையிலான சந்திதிப்பு ஒன்று இடம்பெற்றது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கழமை காலை 09.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடுகள் குறித்து...
தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் முழுப்பங்களித்தல் உட்பட முக்கியமான மூன்று தீர்மானங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)...
Loading posts...
All posts loaded
No more posts
