Ad Widget

விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைய விசேட அதிரடிப் படையினருக்கு நாவற்குழியில் 5 ஏக்கர் காணி தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்டுள்ளது.

நாவற்குழி 300 வீட்டுத்திட்டக் குடியிருப்புக்கு அருகில், கட லேரியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப் படையினருக்கான முகாம் அமைக்கும் பணிகள் சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதியால் யாழ். மாவட்டத்தில் அதிரடிப்படை முகாம் அமைப்பதற்கான காணியை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் எமது அமைச்சால் எமக்கு நேரடியாக வழங்கப்பட்டன. இதனையடுத்து நாவற்குழிப் பகுதியில் பொலிசாரின் முகாம் அமைப்பதற்காக 5 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் நேரடியாக எமது தேசிய வீடமைப்பு அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று கூறினர்.

நாவற்குழிப் பகுதியில் முன்னர் அமைக்கப்பட்ட சிங்களக் குடியேற்றம் போன்று தற்போது இந்த அதிரடிப்படை முகாம் அமைப்பும் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts