- Tuesday
- June 16th, 2026
நாட்டின் முன்னணி இலக்கியசார்ந்த கொண்டாட்ட நிகழ்வான Fairway Galle Literary Festival இன் இறுதியானதும் மூன்றாவதுமான வார நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேகமான மற்றும் பரந்தளவு சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதுடன், உள்நாட்டு திறமைசாலிகளும் பங்கேற்கவுள்ளனர். சகல நிகழ்ச்சிகளும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் முற்றிலும் இலவசமாக...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான...
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஓராண்டாகின்ற போதும், சிறுபான்மையினரான தமிழர்களில் சிலரை பாதுகாப்புப் படைகள் சித்ரவதை செய்வது தொடர்வதாக தென்னாப்பிரிக்காவைக் சேர்ந்த உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டம் குற்றஞ்சாட்டியுள்ளது. சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தாலும், தமிழர்கள் சிலர் இன்றளவும் கடுமையான வன்முறைக்கும் சித்ரவதைக்கும் ஆளாகிவருவதாக அக்குழு...
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியின் பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரை பகுதி, அழகாக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளதால், மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் அங்குச் சென்று, கடற்கரை அழகை இரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், பண்ணையை சுற்றுலா இடமாக மாற்றும் நடவடிக்கை கடந்த 2013ஆம் ஆண்டு 23...
நோர்வே - இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று கொழும்பு வருகின்றார். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல்தடவையாகும். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்...
இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், வெள்ளைக்கொடி ஏந்திவந்து இரண்டு தடவைகள் படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் என்றும் அரச பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பொருளாளரான சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சார்ஜன்ட்டே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இராணுவ சார்ஜன்ட் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டார் எனவும், பின்னர் இராணுவத்தில் இணைந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முஸ்லிம் இனத்தைச்...
ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த அட்டவணையின் ஏழாவது வரிசை பூர்த்தியாகி இருப்பதோடு உலகெங்குமுள்ள அறிவியல் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூலகங்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 114 மற்றும் 116 மூலகங்கள் இணைக்கப்பட்ட பின்னர் ஆவர்த்தன...
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை, கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை யாழ் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவை ஏற்பாட்டில் ஏழாவது தடவையாக நடைபெறும் இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், உள்நாட்டு, வௌிநாட்டு நிறுவனங்கள் பல...
ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா ஒரு ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசனும் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த மூன்றாகம் பாகத்துக்கு வழக்கம்போல சிங்கம் தலைப்பைச் சூட்டாமல், புதிய தலைப்பைச் சூட்ட முடிவெடுத்துள்ளனர். புதிய தலைப்பையும் முடிவு...
2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைகள், பெண்கள் துஷ்பிரயோகம், தற்கொலைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவால், வௌியிடப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொலைகள் 2014ம் ஆண்டு - 548...
பொங்கலுக்கு முன்னதாக தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தமிழக முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத்...
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். அந்தப்...
கடந்த 2015ம் ஆண்டு எனது அமைச்சுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) மூலமாக 310.82 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றன. அதனடிப்படையில் கடந்த வருடம் ஏறத்தாழ 115 திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டு; 31.12.2015 வரை அமைச்சு மற்றும் திணைக்களங்கள் ஊடாக செலவு செய்யப்பட்ட மொத்த நிதி 310.61 மில்லியன்...
ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகின்ற போதிலும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் நாளை வியாழக்கிழமை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கவலையளிக்கும்...
வட மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் குடும்ப நல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள், தங்களுக்கான இடமாற்றங்களை நியாயமான முறையில் வழங்குமாறு கோரி வட மாகாண சுகாதார திணைக்களத்தின் முன்பாக புதன்கிழமை (06) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் மேற்பார்வை குடும்ப நலன் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்காதது ஏன்? திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையொன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிந்து கொண்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நுகர்வோர் அதிகாரசபையின் உரிய அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க உரிய அனுமதி வழங்கப்படவில்லை...
ஆஸ்திரேலிய பெண்ணிடம் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காட்டியதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மீது புகார் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் ஆடிவரும் கிறிஸ் கெயில், டிவி வர்ணனையாளரிடம் மது குடிக்க வருமாரு அழைப்புவிடுத்து சர்ச்சையில் சிக்கி அபாரதத்திற்கு உள்ளானார். இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், கெயில் பற்றி...
வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். இன்றைய தினம் (06.01.2016) தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா,...
Loading posts...
All posts loaded
No more posts
