Ad Widget

சில தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்கிறது – சர்வதேச உரிமைக் குழு

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஓராண்டாகின்ற போதும், சிறுபான்மையினரான தமிழர்களில் சிலரை பாதுகாப்புப் படைகள் சித்ரவதை செய்வது தொடர்வதாக தென்னாப்பிரிக்காவைக் சேர்ந்த உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தாலும், தமிழர்கள் சிலர் இன்றளவும் கடுமையான வன்முறைக்கும் சித்ரவதைக்கும் ஆளாகிவருவதாக அக்குழு தெரிவிக்கிறது.

முன்பு விடுதலைப் புலிகள் அமைப்பில் செயலாற்றியவர்கள் மற்றும் சிறார் போராளியாகச் சேர்க்கப்பட்டவர்களில், ஆண்கள் பதினைந்து பேரையும் பெண்கள் ஐந்து பேரையும் இந்த சர்வதேச அமைப்பு விசாரித்திருந்தது.

தகவல் தெரிவித்த அனைவருமே, சென்ற ஆண்டில் தாங்கள் பொலிசாராலும், இராணுவ உளவுப் பிரிவினராலும் மோசமான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொடுமையையும் அனுபவித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

விசாரிக்கப்பட்டவர்கள் அனைவருமே தற்போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts