Ad Widget

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பொய்யான குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான செய்தி குறித்து அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக வெளியான செய்தி குறித்து நானும் அறிந்தேன்.

அந்தச் செய்தியில் எதுவித உண்மைத் தன்மையும் இல்லை. “ஏனெனில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வு நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டு விட்டது.

அந்த நிகழ்சி நிரலில் முதலமைச்சருக் எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து எதுவும் இடம்பெறவில்லை.

அத்துடன் கட்சித் தலைமையோ கட்சியோ இது குறித்த தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை என்றார்.

அத்துடன் இந்தச் செய்தி எந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதென்பது எனக்கு புரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts