- Friday
- August 21st, 2026
பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது. ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா...
கடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறதாம். இதனால் 2100ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதில் மேரிலான்ட் மற்றும் விர்ஜீனியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படுமாம். அமெரிக்கா முழுவதும் மொத்தமாக...
இத்தாலியில் மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது . 6.2 றிக்டர் அளவில் ஏற்பட்ட பலமான இந்தப் பூமியதிர்ச்சி, கட்டடங்களைக் கீழே வீழ்த்தியிருந்தது. உம்பிரியா பிராந்தியத்திலுள்ள நோர்ச்சா நகரத்துக்கு அண்மையில், இத்தாலி நேரப்படி அதிகாலை 3.36க்கு (இலங்கை நேரப்படி காலை 6:06), இந்தப் பூமியதிர்ச்சி...
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மத்திய இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தாலியின் தென்கிழக்கு நகரமான இல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக பாரியளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாம்...
நாதஸ்வரத்தைப் போல, பிரிட்டனில் தாமிரத்தாலான பேக்பைப் இசைக் கருவியை வாசிக்கும் கலைஞர்களுக்கு மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். அந்தக் கருவியின் குழாயை முறையாக, அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அதில் பல ஆண்டுகளாகப் படியும் அழுக்கு, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, ஓர் இசைக்கலைஞரின் பேக்பைப்பில் படிந்த அழுக்கு, அவரது நுரையீரலில் குணப்படுத்த...
ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, 46 வயதான குறித்த நபர்...
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் உடல்நலக் குறைவால் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும். பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், அதிபர் டோனி டான்...
சர்வதேச ரீதியாக தேடப்படும் பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. கனடாவின் (CTV) சீடிவி என்ற ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரவிசங்கர் கனகராஜா என்ற 43 வயதுடைய குறித்த இலங்கை பிரஜைக்கு கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
சிரியாவில் 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் இதுவரை 2.7 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ளனர். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் உள்நாட்டு போரினால் மடிந்தவர்கள் ஏராளம். இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி...
கடந்த 5 வருடங்களில், சிரியாவில் உள்ள அரசாங்க சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 18000 பேர் உயிரிழந்துள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது. சிறைச்சாலைகளில், அடித்தல், மின்சார அதிர்ச்சியளித்தல் மற்றும் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகத்துக்கு கைதிகளை பெரிய அளவில் உள்ளாக்குவதாக, இந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. தனது அறிக்கையில், சித்திரவதையால் பாதிப்படைந்த...
பிரிட்டனின் வேல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சுவர் வழியாக தேன் கீழே சொட்டியதை அங்கிருந்த வயது முதிர்ந்த நோயாளிகள் கவனித்ததை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம் அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இரு பெரிய தேன் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தேனி வளர்ப்பு வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர். குறைந்தது 5 வருடங்களாக இந்த...
ஆட் கடத்தல்காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் நெருக்கமாக செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குச் செல்ல முற்பட்ட ஆறு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட அறுவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
அதிகளவிலான இணையவழி பாலியல் படங்களை பார்ப்பதால் இளம் ஆண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று...
அவுஸ்திரேலியாவில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில், பிறந்த நாடு என்ற என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையாக தமிழீழம் எனத் தெரிவுசெய்யப்பட்ட விடை, சிறீலங்காவின் அழுத்தத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிறந்த நாடு என்பதற்கு பல அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நாடுகளின் பெயர்கள்...
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் கடந்த வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர்...
பசிபிக் தீவில் உள்ள வனுவாட்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது.
ஒருவருடைய சுய விவரங்களில், பத்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன இதே பெயருடைய ஒரு குற்றவாளியின் விவரங்களை சேர்த்து சீன அதிகாரிகள் குழப்பியுள்ளனர். ஒருவரின் அடையாள எண்ணை, அதே மாதிரியான இன்னொருவரின் அடையாள எண்ணோடு சேர்த்து குழப்பி விடுகின்ற தவறுகளை ஒழித்துவிட, சீன அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சீன ஊடகங்களால்...
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இளைய புதல்வியான சாஷா ஒபாமா தற்காலிகமாக வெள்ளைமாளிகையைத் துறந்து கடலுணவு உணவகம் ஒன்றில் கோடைவிடுமுறை வேலை வாய்ப்பைப்பெற்றுள்ளார். மசாசூட்ஸ் மாநிலத்திலுள்ள மார்த்தா வைன்யாட் உள்ள Nancy’s Restaurant உணவகத்தில் உணவு பரிமாறும் பரிசாரகராக 15 வயதான சாஷாஒபாமா பணிபுரிவதாகவும் அவருக்குப் பாதுகாப்பாக அமெரிக்க இரகசியபுலனாய்வு சேவையை சேர்ந்த 6 முகவர்கள்...
பிரான்ஸ் நாட்டு வீதிகளில் ஒயின் வெள்ளம் சூழ்ந்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 4 ஆயிரம் கோடி லிட்டர்...
வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பேலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. அதில் ஒரு ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட கடல் பரப்பில், தரையிறங்கியுள்ளது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே இந்த செயலை சினத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் ஜப்பானின் பாதுகாப்பிற்கு நேர்ந்த அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார். இரண்டு...
Loading posts...
All posts loaded
No more posts
