Ad Widget

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படும்

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுiமாயன நிபந்தனைகள் பின்பற்றப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நியதிகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாத நிறைவு வரையில் 1316 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் மெய்யாகவே புகலிடக் கோரிக்கை தேவையானவர்களுக்கு அது தொடர்பில் பரிசீலனை செய்ய சந்தர்ப்பம் உண்டு எனவும் தெரிவித்துள்ளது.

Related Posts