Ad Widget

ஆங்கில மொழியை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?

ஐரோப்பிய யூனியனுடன் நீடிப்பது குறித்து பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என மெஜாரிட்டி ஆக 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதனால் பிரிட்டனில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குழப்பங்கள் மற்றும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து, ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த அனைத்து நாடுகளுமே, ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக பயன்படுத்திவருகின்றன. தற்போது, இங்கிலாந்து வெளியேறுவதால், ஆங்கிலத்தையும் தங்களது பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இல்லை என்றால், ஆங்கிலமும் இல்லை என்று ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Posts