- Friday
- August 21st, 2026
குவைத் நாட்டில் சாரதியாக பணியாற்றுகின்ற இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை, கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், அவ்வமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட...
புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது. படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதில் பயணம் செய்த பெரும்பாலனாவர்கள் எகிப்தியர்கள், ஆனால் மற்றவர்கள் கிழக்கு ஆஃப்ரிக்கா...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகுக்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க, தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன...
ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு...
பங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷூம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார...
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கி வருவதால், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்த வித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் (Peter Dutton) பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார். படகு வழியாக தமது...
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், அவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள்...
பேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க நேபாள சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள...
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த எட்டு வருடங்களாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்ததாக இலங்கை தம்பதியினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 48 வயதான குமுதினி கண்ணன், 52 வயதான கந்தசாமி கண்ணன் இருவருமே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். ஜூலை 2007 தொடக்கம் ஜூலை 2015 வரையிலான...
ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுற்று சூழல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான மாசுபட்ட நகரங்களில் ஒன்று நோரில்ஸ்க் நகரம். இந்த நகரத்தை கடந்து செல்லும் டால்டிகான் ஆறு திடீரென...
இங்கிலாந்தின் பேர்க்ஷையர் பிராந்தியத்தின் ஸ்லவ்(Slough) பகுதியைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது முகத்தில் ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து சாதனை சொந்தமாக்கியுள்ளார். ஹார்னாம் கௌர் என்ற 24 வயதான இளம் மொடல் அழகியே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார். இவரின் உடலில் ஆண்களில் சுரக்கும் ஓமோன்கள் அதிகம் சுரக்கின்றமையால் இவ்வாறு...
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வௌியிட்ட விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும்...
மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் ஐந்து...
ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் நொடிந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் தொண்டாற்றிய அன்னை தெரசாவுக்கு நேற்று வாடிகன் அரண்மனையில் நடந்த விழாவில் பாப்பரசர் பிரான்சிஸ் ‘புனிதர்’ பட்டத்தை சூட்டி, அருளாசி அளித்தார். 1910-ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில்...
இந்தியா, பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் சுமார் 250 கோடி பேர், ஸிகா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய சூழ்நிலை உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், அத்தகைய பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். `தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான...
ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக...
பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். லாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு...
எந்த ஒரு செயலும், நடிகர்கள் செய்தாலோ, விளையாட்டு நட்ச்சத்திரங்கள் செய்தாலோ தான் அது பெரிதாக கவரப்படுகிறது. ஏன், விருதுகள் கூட ஊடகத்தின் வெளிச்சத்தில் இருக்கும் இவர்கள் வென்றால் தான் அது பெரிய செய்தி ஆகிறது, மக்கள் அனைவருக்கும் தெரிகிறது. இதுவே, வேறு துறையை சேர்ந்தவர்கள் பெரும் புகழ் பெற்றாலும், சாதனை புரிந்தாலும், கவுரவிக்கப்பட்டலும் கூட அது...
இத்தாலியின் மையப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியை 6.2 ரிக்டர் அளவில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சுமார் 368 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பல கிராமங்கள் பேரழிவை எதிர்நோக்கியுள்ளன. பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது....
Loading posts...
All posts loaded
No more posts
