Ad Widget

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்; 80 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

France

100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

´பாஸ்டில் தினம்’ எனப்படும் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை நேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அவ்வகையில், மொனாக்கோ நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நைஸ் நகர மக்களும் நகரின் பிரதான சாலையில் கூட்டமாக திரண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடினர்.

அப்போது, அந்த சாலை வழியாக வேகமாக வந்த ஒரு கனரக வாகனம் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது.

வேகம் சற்றும் குறையாமல் திரளாக இருந்த மக்களை மோதித் தள்ளியபடி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் முன்னேறிச் சென்றது.

இதில் ஏராளமான மக்கள் வாகனத்தின் டயர்களுக்கு அடியில் சிக்கி நசுங்கினர். தீவிரவாதிகளின் சதிவேலை என கருதப்படும் இந்த கொடூர தாக்குதலில் 80 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது.

நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அந்த கனரக வாகனத்தை ஓட்டி வந்தவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

Related Posts