Ad Widget

ஜேர்மனி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!!

ஜேர்மனியின் தெற்கு நகரான மூனிக்கின் வணிக வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

german

3 பேர் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதலை அடுத்து மூனிக் நகரம் முழுவதும் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெறுகின்றது.

தாக்குதல் இடம்பெற்றபோது தாக்குதல்தாரிகள் இஸ்லாமியத்துக்கு ஆதவான கோஷங்களை எழுப்பினர் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருந்து சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தாக்குதல்தாரியினுடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts