Ad Widget

முடிவுக்கு வந்ததா துருக்கியின் இராணுவ சதிப் புரட்சி?

துருக்கி ராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலருமே காரணம் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

துருக்கியில் நேற்றிரவு புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக இராணுவம் அறிவித்தது.

Turkey

இந்த இராணுவ சதிப் புரட்சியால் ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை சுமார் 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 17 பேர் பொலிஸாரும் அடங்குகின்றனர்.

ஒரு இராணுவக்குழு, நாட்டை ஒரு “அமைதிக் கவுன்சில்” தற்போது நடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மற்றும் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் அறிவித்தது.

ஆனால் பின்னர் பேசிய துருக்கிப் பிரதமர் பினாலி யில்டிரிம், நிலைமை தற்போது பெருமளவு கட்டுக்குள் இருப்பதாகவும், தலைநகர் அங்காராவின் வான் பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சதி தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இஸ்தான்புல்லுக்கு விமானம் மூலம் வந்தடைந்த அதிபர் எர்துகனை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

தொலைக்காட்சிக்கு நேரலையில் பேசிய எர்துகான், இந்த அதிரடிப் புரட்சி முயற்சி ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்று கூறினார்.

துருக்கியில் எற்பட்ட இராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், இராணுவத்தில் உள்ள சிலரும் தான் காரணம். இதன் விளைவை சதிகாரர்கள் விரைவில் கண்டு கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

Related Posts