- Friday
- August 15th, 2025

அமெரிக்காவின் நியூயோர்க்கில் விற்பனைக்கு வந்திருக்கிறது கறுப்பு ஐஸ்கறீம். தேங்காய்ப் பால், தேங்காய் கிறீம், தேங்காய்த் தூள், தேங்காய்க் கரி கலந்த மிகச் சுவையான ஐஸ்கிறீம் இது. கோப்பி, சொக்லேட் சுவையை விட வித்தியாசமான சுவையில் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். தேங்காயின் சாம்பலை ஐஸ்கிறீமுடன் கலந்தனர். சுவையும் நிறமும் இதில் இருந்துதான் கிடைத்தன. விற்பனைக்கு வந்த...

பிரான்ஸில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென் நதியின் நீர் மட்டம் சாதாரண அளவில் இருந்து ஆறு மீற்றர்களுக்கு மேல் உயர்ந்ததை அடுத்து பாரிஸ் நகரில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பிரபல்யம் மிக்க லூவர்( Louvre) மியூசியம் முடப்பட்டிருக்கிறது. நகரை ஊடறுத்துச்செல்லும் நிலத்தடி ரயில் மார்க்கங்களில் ஒன்றான RERC தடத்தில்...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றொருவரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து...

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கி கொண்டிருந்த சில மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே...

இத்தாலி அருகே அகதிகள் சென்ற 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக வெளியான தகவலில்,1 வயது குழந்தையின் உடல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. சிரியா, ஈராக், ஏமன், துருக்கி, லிபியா, சூடான், எரித்ரியா உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் இடைத்தரகர்கள் மூலம் பாதுகாப்பற்ற படகுகளில்...

சிகா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து திரும்பும் மக்களை பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அல்லது குறைந்தது எட்டு வாரங்களுக்காவது உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கூறிய இந்த அறிவுரை, உலக சுகாதார நிறுவனத்தின் முந்தைய பரிந்துரையை விட இரட்டிப்பு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது துணைவருக்கு சிகா வைரஸ்...

கடந்த வாரம் முன்னர் லிபியா கரையோர பிரதேசத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வெவ்வேறு படகு விபத்துக்களில் சுமார் 700 பேர் தஞ்சம் கோரி பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் முகவர் அமைப்பு (UNHCR) தெரிவித்துள்ளது. கடந்த புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற படகு விபத்துக்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா...

படகு மூலம் கடந்த 2012ம் ஆண்டில் அவுஸ்ரேலியா சென்ற இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்துமாறு அவுஸ்ரேலிய மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை திரும்பினால் தண்டிக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக புகலிடக் கோரிக்கையாளர் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறித்த போதிலும் அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை இராணுவத்தினரால் தனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து தாம்...

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையை தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்ததுள்ளது . சியாலா என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே...

தீவிர வானிலை மாற்றங்களால் பல பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு விஷத்தன்மை கொண்டதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வறட்சி மற்றும் அதிகப்படியான வெப்ப நிலை ரசாயன கலவைகளின் குவிப்புக்கு வழிவகை செய்கிறது என வெளிப்படுத்திய ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டி ஒரு புதிய அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக கோதுமை, சிறு...

G-7 அமைப்பின் 42 ஆவது உச்சிமாநாடு இன்று(26) ஜப்பான் நாட்டின் சிசாகி நகரத்தில் ஆரம்பமாகிறது. இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இவ் உச்சி மாநாடு சமாதானம், சுபீட்சத்திற்கான சிறந்த வழியைக்காட்டும் சுதந்திரம், ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகளின் அடிப்படைப் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் இம்முறை நடைபெறுகிறது. சம்பிரதாயபூர்வமான G7 நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக...

வடக்கு தாய்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவிகள் தங்கும் அறையில் தீ பரவி, தூங்கிக்கொண்டிருந்த குறைந்தது 17 மாணவிகள் கொல்லப்பட்டனர். சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளியில், 6 லிருந்து 13 வயது கொண்ட பல மாணவிகள் தங்கியிருந்தார்கள். இதில், பெரும்பாலானவர்கள் மலைப் பகுதி பழங்குடியின கிராமங்களை சேர்ந்தவர்கள். இந்த தீ விபத்தில் 5க்கும்...

சீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை செய்து வருவதாக வெளியான தகவல்கள் ஆபிரிக்கர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இத்தகவலை சாம்பியாவின் சீன தூதுவரான யாங் யொம்மி கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், சீனநாட்டவர்கள் மனித உடல்களை எடுத்து அவற்றை உப்பு மற்றும்...

எகிப்து ஏர் நிறுவனத்தின் தடம் எண்: MS804 கொண்ட ஏர்பஸ் பயணிகள் விமானம் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்றபோது உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணியளவில் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் விமான நிலைய ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்தது. அலெக்சாண்டரியாவின் மத்திய தரைகடல் பகுதியில் நடுவானில் விமானம் வெடித்து...

பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து , எகிப்தின் கெய்ரோ நோக்கி பயணித்த விமானமொன்று மாயமாகியுள்ளது. EgyptAir MS 804 என்ற விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை விமான சேவை உறுதி செய்துள்ளது.அந்த விமானத்தில் 59 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர். பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்...

மூன்று கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 390 கோடி ரூபா) அளிப்பதாகக் கூறியபோதிலும், தனது கண்டுபிடிப்பைப் பெருநிறுவனத்துக்கு விற்க மறுத்த சிறுவன் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான். அமெரிக்காவின்...

ரயன் எயர் விமானத்தில் சந்தேசத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமானநிலையத்தில் நோர்வேக் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இலங்கையரும் வேறு நாட்டவர் ஒருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய காரணத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நோர்வேக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விமானம் மான்செஸ்டர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் கழிவறையில் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது குண்டு என்ற வார்த்தையைப் பிரயோகித்ததாக...

பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன்...

சவுதியில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனிமனிதரின் சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட வல்லூநர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான...

All posts loaded
No more posts