Ad Widget

உலக சாதனை படைத்த 6 மாத குழந்தை!!

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது.

விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையை தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்ததுள்ளது .

child

சியாலா என்ற அந்த பெண் குழந்தை நடக்க முடியாத போதிலும் ஏரியின் குறுக்கே நீர் சறுக்கு பலகையை பிடித்தவாறு 209 மீட்டர் பயணம் செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

தொழில்முறை நீர் சறுக்கு வீரர்களான அந்த குழந்தையின் பெற்றோர், ‘படகு ஏரியின் மறுமுனையில் நின்று விட்டது.
அப்படி இல்லாவிட்டால் இன்னும் அதிக தூரத்தை சியாலா கடந்திருப்பாள்’ என்று பெருமையுடன் கூறியுள்ளனர்.

Related Posts