விடுதலைப்புலிகளுக்கு பணம் சேர்த்ததாகக் கூறி 13 பேருக்கெதிராக சுவிஸில் வழக்கு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கொள்வனவிற்காக பல மில்லியன் கணக்கான டொலர்களை திரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13பேர் மீது சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சுவிஸ், ஜேர்மனி, மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த இவர்கள் மீது குற்றவியல் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்தமை அல்லது அதற்கு உதவியமை, மோசடி, போலி சான்றிதழ், பணச்சலவை,...

11 வயது சிறுவனின் தலை வெட்டி கொலை!!!

சிரியாவில் உளவு பார்த்ததாக 11 வயது சிறுவனை ஐஎஸ் அமைப்பினர் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய இஸ்லாமிய நாடாக உருவாக்கியுள்ள ஐஎஸ் அமைப்பினர் நாளுக்கு நாள் தலை துண்டிப்பு, கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான குற்றங்களை செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்....
Ad Widget

ஆஸ்திரேலியாவில் ஈழத்தமிழ் அகதி சடலமாக மீட்பு!

மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில்...

பாகிஸ்தான் மாடல் அழகி கந்தீல் பலூச் கொலை

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மாடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச். சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார். தன்னை தற்கால...

முடிவுக்கு வந்ததா துருக்கியின் இராணுவ சதிப் புரட்சி?

துருக்கி ராணுவ புரட்சிக்கு மதகுரு பெதுல்லா குலேனேவும், ராணுவத்தில் உள்ள சிலருமே காரணம் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். துருக்கியில் நேற்றிரவு புரட்சி செய்து ஆட்சியை கைபற்றியதாக இராணுவம் அறிவித்தது. இந்த இராணுவ சதிப் புரட்சியால் ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை சுமார் 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

துருக்கியின் ஆட்சியை பிடித்தது இராணுவம்! எதிராக பொதுமக்கள் போராட்டம்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடான துருக்கியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இராணுவப் புரட்சி வெடித்துள்ளது. இதையடுத்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மூண்ட சண்டையில் 17 பொலிஸார் உயிரிழந்தனர் எனக் கூறப்படுகின்றது. தொடர்ந்தும் அங்கு சண்டை நீடித்து வருகின்றது. இதேசமயம் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்களும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். புரட்சியாளர்கள் அதாதுர்க் சர்வதேச விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்...

கனடாவில் தொடர் கொள்ளைகளுடன் தொடர்புடைய இலங்கை தமிழ் இளைஞர் கைது!

கனடாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இலங்கை தமிழர் உட்பட இருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராரியோ மாகாணத்தின் பிராம்டன் நகரைச் சேர்ந்த நிரஞ்சன் கலைச்செல்வம்(32), ஷாகிலே ஹென்றி(20) மற்றும் ரஷீட் அஹம்த்(25) ஆகிய மூவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இவர்களில் நிரஞ்சன் கலைச்செல்வம்...

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்; 80 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ´பாஸ்டில் தினம்’ எனப்படும் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை நேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவ்வகையில், மொனாக்கோ நகரில் இருந்து சுமார்...

இங்கிலாந்து புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்றது. இதனால் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே...

சிறுவனை தூக்கி கொண்டு செல்ல முயன்ற கழுகு

மத்திய ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வனவிலங்கு நிகழ்ச்சி ஒன்றில், பெரிய கூர்மையான ஆப்பு போன்ற வால் கொண்ட கழுகு ஒன்று சிறுவன் ஒருவனை தூக்கி பறந்து செல்ல முயன்றது. அலிஸ் ஸ்ப்ரிங்ஸ் டெசர்ட் பார்க்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த பெரிய கழுகு பயத்தில் அலறிய அந்த சிறுவனின் தலையின் மேல் தனது நகங்களை பதித்ததை கூட்டத்தினர்...

பதவி விலகுகிறார் டெவிட் கமரூன் பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே பதவியேற்கிறார்

பிரிட்டனின் பிரதமராக தனக்கு அடுத்தபடியாக தெரெஸா மே புதன்கிழமை பதவியேற்பார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியிருக்கிறார். மே அம்மையார் மட்டுமே இன்னும் போட்டியில் எஞ்சியிருக்கும் ஒரே தலைவர். அவருடன் போட்டியிலிருந்த மற்றொரு பெண் வேட்பாளரான, ஆண்டிரியா லெட்சம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை அமல்படுத்த புதிய தலைவர் விரைவாக...

7,500 இசைக் கலைஞர்களுடன் நடைபெற்ற பிரம்மாண்ட இசைக் கச்சேரி

ஜெர்மனியில் 7,500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற உலகின் மிக பிரம்மாண்ட இசைக் கச்சேரி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு பாப் பாடல்களையும், மெலடி இசைகளையும் மற்றும் பாரம்பரிய இசைகளையும் வாசித்தனர். இதில், பீத்தோவனின் ''ஒடே டூ ஜாய்'' இசையும் அடக்கம். மூன்றாண்டுகளுக்குமுன், ஆஸ்திரேலியா...

நூற்றுக்கணக்கானோர் பலி !! மோதலை நிறுத்த தென் சூடான் தரப்புகளைக் கோருகிறது ஐ.நா

தெற்கு சூடானில் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இரு தரப்புகளும் மோதலை நிறுத்தி, வன்முறை பரவுவதைத் தடுக்குமாறு ஐநா பாதுகாப்பு சபை கோரியுள்ளது. ஏகமனதாக விடுத்த அறிக்கை ஒன்றில், ஐநா பாதுகாப்பு சபை, இந்த மோதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, ஐநா அலுவலகங்களும் தாக்கப்பட்டது குறித்து குறிப்பான அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பதில் நடவடிக்கையாக அங்கு மேலும் கூடுதல்...

சிறையை உடைத்து காவலரின் உயிரை காத்த கைதிகள்

அமெரிக்காவின் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அந்த சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டுயிருந்தனர். இந்த சிறைக்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்து வந்துள்ளார். அவர் இன்று நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தபடி கைதிகளிடம் நகைச்சுவை செய்து கொண்டும் பேசி கொண்டும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் நெஞ்சு வலியினால் திடீரென...

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படும்

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுiமாயன நிபந்தனைகள் பின்பற்றப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நியதிகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2009ம்...

அப்பாவியை துடிதுடிக்க சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசாரின் அத்துமீறல்: அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடையின் வெளியே கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங்(37) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம், அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. பல பகுதிகளில் போலீசாரின் அத்துமீறலுக்கு எதிராக கருப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு...

விஸ்தரிக்கப்பட்ட பனாமா கால்வாய் வழியாக பயணித்த கப்பலின் கப்டன் இலங்கைத்தமிழர்!

MOL Benefactor’ என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக ரீதியான பயணத்தை கடந்த 1 ஆம்...

வங்காளதேசத்தில் ரமலான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடிப்பு

வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 20 வெளிநாட்டவர்கள் பலியான சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் மறையவில்லை. இந்த நிலையில், அங்கு ரமலான் தொழுகை நடைபெற்ற இடம் அருகே குண்டு வெடித்தது. வங்கதேசத்தின் கிஷாரிகஞ்ச் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை பிரம்மாண்ட தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகை நடந்த இடத்திற்கு அருகே...

ஒலிம்பிக் போட்டிக்காக சிறுவர்களை வதைக்கும் சீனா! (வீடியோ)

ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துவரும் சீனா, இந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியிலும்...

சவுதியில் இரு புனித தலங்கள் அருகே குண்டுவெடிப்பு

சவுதி அரேபியாவில் மதினா, காடிஃப் ஆகிய இரண்டு நகரங்களில் புனித தலங்கள் அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமியர்களின் புனித தளங்களில் முக்கியமான ஒன்றான மதினாவில், மசூதி அருகே தற்கொலைப் படை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் அல்-அரேபியா தொலைக்காட்சி வாகனம் வெடித்து சிதறியதற்கான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. விபத்தில் ஏற்பட்டுள்ள...
Loading posts...

All posts loaded

No more posts