அமெரிக்காவின் மனித உரிமைகள் உதவி செயலாளர் இலங்கை வந்தடைந்தார்

அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவர் இன்று (12) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். கடந்த...

7 வயது சிறுவன் துஷ்பிரயோகம்! பாடசாலை சிற்றூழியர் கைது

கிளிநொச்சி பளை பகுதியில் 7 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பாடசாலை சிற்றூழியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதங்கேனி பகுதியை சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Ad Widget

சிறுமியை காதலித்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நாவற்குழிப் பகுதியில் 14 வயதுச் சிறுமியை பற்றைக்குள் கூட்டிச் சென்று துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்றுத் திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார். மேற்படி சிறுமியும் இளைஞனும் காதலித்துள்ளனர். இளைஞன், அழைத்ததையடுத்து, சிறுமி அவரைச் சந்திக்கச் சென்ற வேளை,...

பல்கலைக்கழக மாணவன் தற்கொலையா? கொலையா?

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கட்டுபெத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் கூறினர். கற்றல் நடவடிக்கையின் பின்னர் நேற்றைய தினம் மாலை குறித்த மாணவன் விடுதிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்...

சட்டவிரோத கருகலைப்பு: தனியார் சிகிசை நிலையத்திற்கு சீல்

கிளிநொச்சி தா்மபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாா் சிகிச்சை நிலையம் நேற்று கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அதிகாரிகளினால சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சை நிலையத்தில் சிறுமி ஒருவருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது எனும் குற்றச்சாட்டிற்கு அமையவே சீல் வைக்கப்பட்டதாக தா்மபுரம் பொலீஸ் தெரிவித்துள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சோ்ந்த 14...

வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்

வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக் கோரி வடமாகாணசபையை முற்றுகையிட்டு மாகாண கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு வடமாகாணத்தின் 4 மாவட்டங்களிலும் இருந்து வந்த கடற்றொழிலாளர்கள் வடமாகாணசபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக்...

அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர் தொகை அதிகரிப்பு!! பட்டதாரிகள் அதிர்ச்சி

பட்டதாரிகளிற்கு நிமயனம் வழங்கப்போவதாக மத்திய, மாகாண அரசுகள் அறிவித்தல் விடுத்துள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்ற விடையமாக இருக்கின்றபோதிலும் தொண்டராசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்போவதாக அரசு அறிவித்துள்ள பின்னணியில் அரசியல் செல்வாக்குகள் காரணமாக தொண்டர் ஆசிரியர்கள் தொகை திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளமையானது தகுதிவாய்ந்த பட்டதாரிகளின் நியமனங்களி்ல் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் இச் செயற்பாடானது கல்விமட்ட அடைவுகளிலும் தாக்கத்தைச் செலுத்தும் எனவும்...

ஐ.ஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல்!

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த 17 பேர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் இவர்கள் இலங்கை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கு அறிவிக்கும் பட்சத்தில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு தரப்பு எந்தவித தகவல்களையும்...

முழுக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது!-மஹிந்த

ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் மக்களுக்கான எனது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது பிள்ளைகளை சிறை வைப்பதன்...

மனோகணேசன் அவர்களுக்கு வடக்கு ஊடகவியலாளர்கள் கடிதம்!

கௌரவ மனோ கணேசன் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர் இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு. வடக்கு ஊடகவியலாளர்களது தெற்கு பயணம் பனையோலையும் எழுத்தாணியும் சேர்ந்ததோர் நட்புறவு பயணம் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் சுமார் 125 தெற்கு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக வடக்கிலிருந்து 54 ஊடகவியலாளர்கள்...

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்!

பாண் உட்பட வெதுப்பக உற்பத்திப் பொருட்கள் அனைத்தினதும் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது எனத வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். வெதுப்பக உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பாம் எண்ணெய், மாஜரின், உப்பு, சீனி என்பவற்றின் விலை 20 வீதத்தால் உயர்ந்துள்ளது. இது குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதன் பின்னர் விலை அதிகரிப்பது குறித்துத்...

மாணவனின் பிணை மனு நிராகரிப்பு! சிறையிலிருந்து பரீட்சை எழுதுமாறு அறிவுரை!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் பிணை மனுவை நீதிபதி ம.இளஞ்செழியன் நிராகரித்தார். அத்துடன் அவரை சிறையில் இருந்தவாறு ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். குறித்த மாணவன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்றுக்கு...

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர் செய்யவில்லை

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையார் ஒருவரையே கடந்த 05 ஆம் திகதி...

வடக்கில் வேலையின்மையால் 35,000 பேர் பாதிப்பு

வட மாகாணத்தில் சுமார் 35,000 பேர் வரை வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வட மாகாணத்தில் 3200 நிறுவனங்கள் வரை இருப்பதாக குறிப்பிட்ட அவர் அதில் பத்தாயிரம் வரையோனோர் பணி புரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வேளையே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை...

விபத்தில் பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த வேன் ஒன்று பண்ணைப் பாலப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பண்ணை பாலப் பகுதியில் நேற்று (11) திங்கட்கிழமை மதியம் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் ஆளவெட்டி பகுதியைச் சேர்ந்த...

வன்னியில் அழிந்த வாகனங்களுக்கு இழப்பீடு மறுப்பு!! பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அழைப்பு

வன்னி இறுதி யுத்தத்தில் அழிந்து போயுள்ள வாகனங்களுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பல, முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்டிருந்ததுடன், அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர். பின்னர், அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன. இந்நிலையில், தமது வாகனங்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை...

இராணுவம் வெளியேறினால் விகாரைகளுடன் செல்ல வேண்டும்

வடமாகாணத்தில் 2018ஆம் ஆண்டில் இராணுவம் இருக்காது என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அது நடக்குமானால் இராணுவம் போகும் போது, விகாரைகளையும் கொண்டு செல்ல வேண்டும்' என, வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'முல்லைத்தீவு மாவட்டமானது, பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர் காலத்துக்கு முன்பு...

நாமல்க்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் நேற்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். அதனையடுத்து,...

சீமெந்து கூட்டுத்தாபன காணியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடுகள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நாட்டப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச்...

சில எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருள் வகைகளில் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனியவள மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய எரிபொருள் நிறுவனங்களினால், Xtra Premium Euro3 மற்றும் Extra Mile ஆகிய எரிபொருட்களின் உற்பத்தி விலைகள் 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Loading posts...

All posts loaded

No more posts