- Wednesday
- August 12th, 2026
வடமாகாண சபையின் 10 உறுப்பினர்கள், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என 16பேர் கொண்ட குழுவினர், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான செயலமர்வொன்றுக்காக கேரளாவுக்குச் செல்லவுள்ளனர். ஏசியன் பவுண்டேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வுக்கு, முதற்கட்டமாக 10 உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும், எஞ்சியவர்கள் சுழற்சி முறையில் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்...
வலிகாமம் வடக்கில், தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள வீடுகளை, இராணுவத்தினர் தொடர்ச்சியாக இடித்தழித்து வருகின்றனர். கட்டுவன் மற்றும் குரும்பசிட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளே இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு கிராமங்களினதும் பகுதியளவு பிரதேசங்கள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், விடுவிக்கப்படாத காணிகளில் உள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அழிக்கப்படும்...
யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதியினை குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதி வழியாக யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ளார்....
தமிழகத்தில் இருந்து இன்று 35 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையில் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர். மதுரையில் இருந்து 17 பேரும் சென்னையில் இருந்து 18 பேரும் இரண்டுவிமானங்களில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தந்த அகதிகளில் 11 ஆண்கள் மற்றும் 24 பெண்கள் உள்ளடங்கியுள்ளதாகபுனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதி உறுதிப்படுத்தியுள்ளார்....
நிவாரண விலையின் கீழ் 15 வகையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த பொருட்களுள் சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், டின் மீன் , பயறு, கௌபி, நெத்தலி, கடலை, கொத்தமல்லி, பாம் எண்ணெய், சோயா, மாசி மற்றும் கருவாடு ஆகிய பொருட்கள் அடங்குவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சில்...
வரையறுக்கப்பட்ட நாட்களில் 250 இந்திய மீனவ படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர்களினால் இலங்கை கடற்பரப்புக்குள் மேற்கொள்ளப்படும் அழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நிலைமையில் தினம் ஒன்றுக்கு 3000...
சமீபத்திய காலமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னால் போராளிகளின் மரணங்கள் மீதமிருக்கும் போராளிகளின் மனதிலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது இந்த வரிசையில் முன்னால் போராளியும் பொட்டம்மானின் சாரதியாக இருந்த சசிகுமார்(ராகுலன்) என்பவரும் காலமாகியுள்ளார் தொடரும் இந்த மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன? என்பது விடையில்லா புதிராக உள்ளது போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படும்போது இராணுவத்தினரால் திட்டமிட்டு ஏதேனும் விஷமருந்துக்கள்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனமுற்று நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் தனக்கு...
பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் 15 வயது மாணவி ஒருவர் குடும்பமாக வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை இனங்கண்டு மீண்டும் அவர்களைப் பாடசாலைகளில் இணைக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி நீதவான் பணிப்புக்கமைய செயற்படுத்தப்படுகின்றது. மலையாளபுரம், பாரதிபுரம், பொன்னகர், கிராமங்களில் சில நாட்களாக திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....
வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே,...
உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் மாகாண சபை அதிகாரத்தில் இல்லை' என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பில்...
இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்ற சாந்தன், தன்னை இலங்கைச் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேவேளை, அவரது உணர்வை மதிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக தழிழக சிறையில் உள்ள போது தனது தந்தையை இழந்துள்ளார். இலங்கை சிறையில் இருந்தால அவரது...
உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை பகுதிபகுதியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது. அதன்படி எல்லை நிர்ணயப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு அரசு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் எல்லை நிர்ணயம் முடிவுற்றிருக்கும் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில் நடத்த முன்னேற்பாடுகளைச் செய்ய ஆயத்தங்கள் நடந்துவருவதாக அறிய முடிகின்றது. கூட்டு...
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தபோது இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையில் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. அத்துடன் பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. மாதகல் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ரொபின்தாஸ் என்பவர் கடந்த 19.06.2014...
கனேடிய தமிழ் காங்கிரஸின் தலைவரும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். தனிப்பட்ட பயணமாக இலங்கை வந்தள்ள கனேடிய ஆளும் கட்சியியான லிபரல் கட்சியின் ஸ்காபரோ தொகுதி எம்.பியான ஹரி ஆனந்தசங்கரி ஈழத்தமிழர்களாகாக போராட்டங்களை மேற்கொண்டு வருபவர் ஆவார். சம்பந்தனை சந்தித்த...
இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 3 இற்கு உள்ளீர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையொன்று எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. சேவை அனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்...
பஸ் கட்டணத்தை 100க்கு 6 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக் தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்னறன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், நாட்டை வந்தடைந்துள்ளார். பங்களாதேஷ் டாக்கா நகரத்திலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான MJ – 502 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். அரசாங்கத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோரைச்...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்குவமான படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகவிருக்கின்றோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலேயே வடக்கு கிழக்கு இணைந்திருக்க வேண்டுமென திடமாக வலியுறுத்தி வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை முஸ்லிம்...
வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார். இதேவேளை, நாமல்...
Loading posts...
All posts loaded
No more posts
