Ad Widget

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம், முதலமைச்சரை ஏற்றுக்கொள்ள தயார் : சம்பந்தன்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்­கு­வமான படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம் என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான ஆர்.சம்­பந்தன் தெரி­வித்தார்.

தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தா­லேயே வடக்கு கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்­டு­மென திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனை முஸ்லிம் தலை­வர்­களும் மக்­களும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் இடம்­பெற்­ற நிகழ்வொன்றில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

எமக்கு எதி­ராக எமது போராட்­டங்­க­ளுக்கு எதி­ரான பல அநீ­திகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன. பிர­ஜா­வு­ரிமைச் சட்டம் பாரா­ளு­மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் அர­சியல் பலம் குறைக்­கப்­பட்­டது.

நாடு சுதந்­தி­ர­ம­டைந்த போது தமி­ழுக்கும் சிங்­க­ளத்­திற்கும் சம உரிமை கொடுக்­கப்­ப­டு­மென ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. ஆனால் பின்னர் தனிச்­சிங்­களம் சட்டம் 1956ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

பெரும்­பான்மை இனம் தமிழ் பேசும் இனங்­களின் பிர­தே­சங்­களில் குடி­யேற்­றப்­பட்­டார்கள். விசே­ட­மாக கிழக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றங்கள் மிகவும் தீவி­ர­மாக இடம்­பெற்­றி­ருந்­தன.

எமது நாட்டில் 1947 ஆம் ஆண்­டுக்கும் 1981ஆம் ஆண்­டுக்­கு­மி­டை­யி­லான காலப்­ப­கு­தியில் சிங்­கள மக்­களின் இயற்கை ரீதி­யான அதி­க­ரிப்பு 2.5 வீத­மாகும். இக்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில் சிங்கள மக்­களின் இயற்கை ரீதி­யான அதி­க­ரிப்பு 9 வீத­மாகும். தற்­போது வட­மா­கா­ணத்­திலும் அவ்­வி­த­மான நிகழ்­வு­களை நிறை­வேற்­று­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

இக்­கா­ர­ணத்தின் நிமித்தம் தான் வடக்கு கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். முஸ்லிம் தலை­வர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

ஒரு தமிழர் தான் முத­ல­மைச்­ச­ராக இருக்க வேண்­டு­மென்ற கார­ணத்­திற்­காக நாம் அவ்­வாறு செய்­யவில்லை.

ஒரு பக்­கு­வமான படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் எப்போம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். எமது பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­டு­வது சந்­தே­கத்­துக்கு இட­மின்றி உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண்டும்.

அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மென்­பதை அன்­பா­கவும் தாழ்­மை­யா­கவும் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­கின்றோம்.

தற்­போது பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. வழி­ந­டத்தும் குழு நிர்­ண­யிக்­கப்­பட்டு ஒழுங்­காக கூடி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

புதிய அர­சியல் சாசனம் இந்த நாட்­டிற்கு அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

புதிய அர­சியல் சாச­ன­மா­னது தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மா­ன­தல்ல. அனைத்து மக்­களுக்கும் முக்­கி­ய­மா­னது.

அதற்­காக அனை­வரும் முயற்­சிக்­கின்­றார்கள். புதிய அர­சியல் சாச­னத்தின் ஊடா­கவே தற்­போ­துள்ள நிலை­யி­லி­ருந்து நாட்டை மீட்க முடியும் என்றார்.

Related Posts