பல்கலைக்கழக பணியாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு!

அரச பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாய் மாத சம்பளத்தை பல்கலைக்கழகங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கான சுற்றரிக்கையினை வெளியிடுவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் அலுவலக பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையானது 57 இல் இருந்து 60 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான விசேட கொடுப்பனவாக 20 வீதத்தை ஊழியர் சேமலாப நிதியில் வைப்பிலிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக...

75 நாட்கள் அல்ல 75 செக்கன்களுக்கும் இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் வடக்கு மீனவர்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டொன்றின் 75 நாட்களுக்கு...
Ad Widget

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனைச் சந்தைக்கு எதிரில் இருந்து வவுனியா அரச செயலகத்திற்கு பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வவுனியா பொருளாதார...

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 8 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களை நிறுவ அனுமதி!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட எட்டு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொழில்நுட்ப பீடங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 'ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி 5 வீதத்தால் அதிகரிக்கின்றது. இந்நிலையில், பட்டப்படிப்பை தொடரும்...

சமையல் நிகழ்ச்சியில் நிஷா பிஸ்வால்!

மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாகினி தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார். ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ‘நுகசெவன’ என்ற சமையற்கலை தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டார். இலங்கையின் பிரபல சமையற்கலை நிபுணர் பப்ளிஸ் சில்வாவின் வழிகாட்டலின் கீழ் நிஷா பிஸ்வால் உள்ளூர் உணவொன்றைச்...

சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடக்கூடாது!

வட மாகாணத்தில் நடைபெறும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடக்கூடாதென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கு மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு முப்படைகளின் கட்டளைத் தளபதியையும், கடற்படையின் அதிகாரிகளையும் நீக்குமாறு கோரி வடமாகாண சபையின் பிரேரணைக்கு அமையவே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 56ஆவது அமர்வு நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை)...

கடத்தப்பட்ட மாணவர்கள் உயிருடனுள்ளனர் !! வைபரில் தகவல்!

கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி அனுப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவில் சவூதி அரேபியாவில் உள்ள உறவினர் ஒருவர் ஊடாக...

மனைவிக்கு தீ மூட்டிய கணவன் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மனைவிக்கு தீ மூட்டி தானும் தீ முட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌந்தராஜா உதயராஜா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இவர்கள் இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர்...

அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயக்கம்! நிஷா பிஸ்வால்

"இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போதுதான் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.'' இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய...

போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது! ஐ.நா.

இலங்கையில் போரின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து இலங்கை அரசு உறுதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ - மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றிற்கு...

கொத்துக்குண்டு பாவனை சட்டவிரோதமானதல்ல! கண்டனங்கள் மத்தியில்மீண்டும் பரணகம

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கொத்துக்குண்டு பாவனையை நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தி மீண்டுமொரு அறிக்கையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார். 2010 ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பாவித்திருந்தால் அது தவறானதல்ல என்பதே அவரது வாதமாகும்....

6 மாத கால அலசலின் பின்னரே நாமல் கைது! அரசியல் பழிவாங்கல் இல்லை என்கிறது அரசு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்‌ஷவின் கைதானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென மஹிந்த ஆதரவு அணி முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசு நிராகரித்தது. 6 மாதங்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், உரிய நெறிமுறைகளுக்கு அமையவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா...

கொலைக்குற்ற குற்றவாளிக்கு பிணை வழங்க மறுப்பு!

கொலைக்குற்றம் ஒன்றுக்காகப் பத்து வருடம் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. அந்தப் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், கடந்த 2009...

யாழிலிருந்து வெள்ளவத்தைக்கு புதிய பஸ் சேவை

இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை நாளை (15.7.2016) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இச் சேவை தினமும் வெள்ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும். இப் பஸ் யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஊடாக...

இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படுவர்!- நிதி அமைச்சர்

எதிர்வரும் காலங்களில் இன்னும் பல ராஜபக்சாக்கள் கைது செய்யப்படவுள்ளதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கோத்தா, பசில் மட்டுமல்ல இன்னும் பலர் கைதுசெய்யும் பட்டியலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் வாழும் பிரஜை என்ற ரீதியில் அடுத்த கைது யாரென தான் அறிந்து...

அச்சுவேலி தொலைத்தொடர்பு நிலையத்தில் தீ

அச்சுவேலி நகரப்பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் நகரப்பகுதியில் அமைந்துள்ள மூன்று கடைதொகுதியின் கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலும் இரு கடைகள் பகுதியளவில் எரிந்துள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில்...

இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்படவில்லை– அரசாங்கம்!

இறுதி யுத்தத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லையெனவும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினர் பொதுமக்களை இலக்குவைத்து பயங்கரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபடவில்லையெனவும் பொதுமக்களைக் காப்பாற்றியே பிரச்சனைக்குத்...

சம்பந்தன் தேவையில்லையென்கிறார் சுமந்திரன் தேவையென்கிறார் யார் கூட்டமைப்பின் தலைவர்? அரசாங்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா? அரசாங்கத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தனின் கருத்தை மீறி சுமந்திரன் கருத்து வெளியிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் இணக்கம்...

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு: இரகசிய வாக்குமூலங்களை தர மறுப்பு

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் கூறினார். வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 'இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில்...

கல்லுடைக்கும் தொழிற்சாலையால் மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம், ஈவினை கிழக்கிலுள்ள கல்லுடைக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தூசுப் படலம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், வீதியில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்படுகின்றன. மேற்படி இடத்தில் இயங்கி வரும் கல்லுடைக்கும் தொழிற்சாலைக்குத் தேவையான கற்கள், அருகாமையிலுள்ள காணியில் குவிக்கப்பட்டு, பாரிய அரிதட்டுக்கள் மூலம் அரிக்கப்பட்டு, அதன் பின்னர் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நேரக்கட்டுப்பாடின்றி அரிதட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts