Ad Widget

சம்பந்தன் தேவையில்லையென்கிறார் சுமந்திரன் தேவையென்கிறார் யார் கூட்டமைப்பின் தலைவர்? அரசாங்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா? அரசாங்கத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Mahinda-Samarasinghe

சம்பந்தனின் கருத்தை மீறி சுமந்திரன் கருத்து வெளியிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கும் என சுமந்திரன் அமெரிக்காவில் தெரிவித்திருந்தார். அரசியலமைப்பில் அதற்கான சிக்கல்கள் எதுவும் இல்லையெனவும் சுமந்திரன் அமெரிக்காவில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிறீலங்கா அரசாங்கம் சரியான முறையில் செயற்படுகின்றது எனவும், போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் தேவையில்லையென சம்பந்தன் தெரிவித்திருந்தார். அதனை நான் ஒரு பத்திரிகையில் பார்த்திருந்தேன். அவர் தமிழ் மக்களின் தலைவர், அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர். அவ்வாறு இருக்கும் ஒருவர் சரியான வகையில் கருத்து ஒன்றை முன்வைக்கும் நிலையில் சுமந்திரன் சர்வதேச அரங்கில் தெரிவிக்கும் கருத்துக்கள் எந்தளவு முக்கியம் பெறும்.?

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா? என அரசாங்கத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பந்தன் பொறுப்புமிக்க கருத்தொன்றை தெரிவித்த நிலையில் சுமந்திரன் அதையும் மீறி கருத்துக்கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்.

Related Posts